என் மலர்
உள்ளூர் செய்திகள்
உடுமலையில் 38 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
- 38 ஊராட்சிகளில் பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய 253 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
- காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
உடுமலை:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 38 ஊராட்சிகளில் பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய 253 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார். உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.எம். தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கண்ணம்மநாயக்கனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கி.ஊ), மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.