என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுதந்திர தினவிழா நடைபெற்ற திருப்பூர் அரசு சிக்கண்ணா கலைக்கல்லூரிக்கு வந்த மாணவியின் உடைமைகளை போலீசார் சோதனை செய்த காட்சி.
சுதந்திரதினவிழாவையொட்டி திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு - முக்கிய இடங்களில் வாகன சோதனை

- விழா நடக்கும் இடங்களில் போலீசார் கேமராக்கள் மூலம் கண்காணித்தனர்.
- முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
திருப்பூர் :
சுதந்திர தினவிழாவையொட்டி திருப்பூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. திருப்பூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா நடைபெறும் சிக்கண்ணா கல்லூரி மைதானம் ஆகியவை போலீசாரின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டது. விழா நடக்கும் இடங்களில் போலீசார் கேமராக்கள் மூலம் கண்காணித்தனர்.
ரெயில் நிலையம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் திருப்பூர் மாநகர் முழுவதும் போலீசார் ரோந்துப்பணிகள், வாகன சோதனையில் ஈடுபட்டனர். மாநகரில் 10-க்கும் அதிகமான இடங்களில் விடிய, விடிய வாகன சோதனைகள் நடத்தப்பட்டது. முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இது தவிர மாவட்டத்தின் பிற பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.