என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![இந்திய விமானப்படையில் ஆட்கள் சேர்ப்பு முகாம் இந்திய விமானப்படையில் ஆட்கள் சேர்ப்பு முகாம்](https://media.maalaimalar.com/h-upload/2023/08/05/1927576-09airforce.webp)
X
இந்திய விமானப்படையில் ஆட்கள் சேர்ப்பு முகாம்
By
மாலை மலர்5 Aug 2023 4:07 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் சேர விருப்பமுள்ள விண்ணப்பிக்கலாம்.
- 27-6-2003 முதல் 27-12-2006வரைக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
திருப்பூர்:
இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறஉள்ளது. இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் சேர விருப்பமுள்ள இருபாலர்களும் 17-8-2023 வரை https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்திடலாம்.எழுத்துத்தேர்வு 13-10-2023 பின் நடைபெறவுள்ளது.
இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் சேருவதற்கு தகுதியான வயது 27-6-2003 முதல் 27-12-2006வரைக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் இரு பாலரும் கலந்துகொள்ளலாம்.மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
எனவே திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பமுள்ள தகுதியான இருபாலர்கள் ஆட்சேர்ப்புக்கு பதிந்து முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story
×
X