என் மலர்
உள்ளூர் செய்திகள்

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

- ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைஉடனடியாக தொடங்க வேண்டும்.
- 2022முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படியையும் வழங்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரியஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரிய பணியாளர்களுக்கு 1.12.2019 முதல் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைஉடனடியாக தொடங்க வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மின்வாரியத்திற்கு சொந்தமான வட சென்னை அனல் மின்நிலையம் அலகு-3ன் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளைமுழுவதுமாக அயல்பணிக்கு ஒப்படைக்கும் முறையை கைவிட வேண்டும். மின்வாரியத்திற்குசொ ந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள தரவுகளை தனியார் ஏஜென்சியிடம்ஒப்படைக்கக்கூடாது. நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பையும் மற்றும் ஜனவரி 2022முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படியையும் வழங்க வேண்டும். தரமான தளவாட பொருட்கள்தடையின்றி தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் பி .என்.ரோட்டில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் இன்று காலை முதல் கா த்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.