என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மதிப்பெண் சான்றிதழ் -  பள்ளிகளிலேயே வழங்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு
    X

    கோப்பு படம்.

    அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மதிப்பெண் சான்றிதழ் - பள்ளிகளிலேயே வழங்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

    • தகுதியான மாணவர்களை கண்டறிந்து, பள்ளி மேலாண்மை குழு மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களின் விபரங்களை, பிரத்யேகமாக எமிஸ் இணையதளத்தில் குறிப்பிட வேண்டும்.

    திருப்பூர்,ஜூலை.30-

    10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்காதவர்கள், தோல்வியடைந்தவர்கள், துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை கண்டறிந்து அரசின் தொழிற்பயிற்சி நிலையம், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியான மாணவர்களை கண்டறிந்து, பள்ளி மேலாண்மை குழு மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக, ஐ.டி.ஐ., படிப்பில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். இதற்கு பள்ளிகளில் அணுகுவோருக்கு, மதிப்பெண் சான்றிதழ் வழங்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களின் விபரங்களை, பிரத்யேகமாக எமிஸ் இணையதளத்தில் குறிப்பிட வேண்டும்.இடைநிற்றல் தழுவியோருக்கு, இந்த வாய்ப்பை வகுப்பு ஆசிரியர்கள் மூலம் எடுத்துரைக்குமாறு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    Next Story
    ×