என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
அவினாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்20 Sept 2022 1:12 PM IST
- தொழிலையும் மக்கள் வாழ்வையும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
- மின்சாரம் வாங்க மத்திய அரசு, மாநில அரசை நிர்பந்தம் செய்யக்கூடாது,
அவினாசி :
கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க மத்திய அரசு, மாநில அரசை நிர்பந்தம் செய்யக்கூடாது, தொழிலையும் மக்கள் வாழ்வையும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவினாசி ஒன்றிய குழு சார்பில் மங்கலம் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, சி ஐ டி யு .விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முத்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, சண்முகம், உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X