என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
மருந்துகள் கிடைக்கவில்லையா? 104ஐ தொடர்பு கொள்ள சுகாதாரத்துறை அறிவிப்பு
- சில மருந்துகள் கிடைக்காமல் தனியார் மருந்தகங்களை நாட வேண்டிய சூழல் உள்ளது.
- அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் மருந்து இருப்பு இருக்கும் என்பதை தெரிவித்து விடுவர்.
திருப்பூர் :
அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கவில்லையெனில் 104க்கு தொடர்பு கொள்ளுங்கள் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்துள்ள போதும் சில நேரங்களில், குறிப்பிட்ட சில மருந்துகள் கிடைக்காமல் தனியார் மருந்தகங்களை நாட வேண்டிய சூழல் உள்ளது. விலை உயர்வாக இருக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனை, மேம் படுத்தப்பட்ட, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் குறிப்பிட்ட சில மருந்துகள் இல்லையென தெரிவித்தால் அந்த மருந்து குறித்து 104 என்ற அரசின் இலவச உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.உடனே, அவர்கள் அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் மருந்து இருப்பு இருக்கும் என்பதை தெரிவித்து விடுவர். மருந்து கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவர் என திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.