search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைன் மூலமாக சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்.

    ஆன்லைன் மூலமாக சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    • படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
    • www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரைபடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.inஎன்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையிலும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் குறித்து கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்லாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×