என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அவினாசியில் வேப்ப மரங்கள் வெட்டி கடத்தல் அவினாசியில் வேப்ப மரங்கள் வெட்டி கடத்தல்](https://media.maalaimalar.com/h-upload/2023/03/17/1851107-untitled-1.webp)
X
கோப்புபடம்.
அவினாசியில் வேப்ப மரங்கள் வெட்டி கடத்தல்
By
மாலை மலர்17 March 2023 5:10 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சுண்டக்காம்பாளையத்தில் 50 க்கும் மேற்பட்ட வேப்ப மரங்கள் இருந்தது.
- மூன்று நபர்கள் ஜேசிபி மூலம்வெட்டி கடத்திச் சென்றுள்ளனர்
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் காசி கவுண்டன் புதூரைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 53)என்பவர் அவினாசி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-நம்பியாம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுண்டக்காம்பாளையத்தில் எனக்கு 2.20 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 50 க்கும் மேற்பட்ட வேப்ப மரங்கள் இருந்தது. இந்த நிலையில் நான் கடந்த வாரம் வெளியூர்சென்று விட்டேன். அப்போது எனது தோட்டத்தில் இருந்த வேப்ப மரங்களை மூன்று நபர்கள் ஜேசிபி மூலம்வெ ட்டி கடத்திச் சென்றுள்ளனர் .
இது பற்றி அவர்களிடம் கேட்டபோது அலட்சிய மாகவும் மிரட்டல் விடும் தொணியிலும் என்னை மிரட்டுகிறார்கள் .எனவே இது குறித்து விசாரித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கு மாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
X