என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
வெள்ளகோவிலில் மது பார் ஊழியருக்கு பீர்பாட்டில் குத்து

- மேல் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
- வெள்ளகோவில் போலீசார் 3 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் கரூர் ரோட்டில் தனியார் மது பார் உள்ளது. இந்த பாரில் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் பாலமுருகன் (வயது 25) சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகின்றார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு அடிக்கடி பாருக்கு வரும் 3 நபர்கள் வந்து பாலமுருகனை பார்த்து தகாத வார்த்தைகளால் கூப்பிட்டு மது கொண்டுவர கூறியுள்ளனர். ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று பாலமுருகன் கேட்டுள்ளார். அதற்கு அந்த 3 நபர்களும் எங்களையே எதிர்த்து பேசுகின்றாயா? என்று கூறி கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து பாலமுருகனை குத்தி உள்ளனர். உடனே பாலமுருகன் சத்தம் போட்டதால் பாரில் பணியாற்றும் பணியாளர்கள் வரவும் 3 நபர்களும் பாட்டிலை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். உடனே பாலமுருகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் 3 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.