search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி
    X

    கோப்புபடம். 

    ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி

    • 78 ஆசிரியர்கள், 6 முதல் 9-ம் வகுப்பு வரை கற்பிக்கும் 30 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
    • ஆங்கில உரையாடல் என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

    உடுமலை:

    அரசு பள்ளிகளில் பயிலும் 4-ம்வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி (ஸ்போக்கன் இங்கிலீஷ்) அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு பள்ளிகளில் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்க மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது. உடுமலை திருமூர்த்தி நகரிலுள்ள மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், மாவட்ட அளவிலான ஆங்கில பேச்சு பயிற்சி வழங்கப்படுகிறது.

    முதற்கட்ட பயிற்சியில் ஆங்கில புலமை வாய்ந்தவர்களாக தேர்வு செய்யப்பட்ட 4,5-ம் வகுப்பு எடுக்கும் 78 ஆசிரியர்கள், 6 முதல் 9-ம் வகுப்பு வரை கற்பிக்கும் 30 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இதில் சரளமாக ஆங்கிலம் பேசுவது மற்றும் மாணவர்களை பேச வைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது: -

    மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து உயர் கல்விக்கு செல்லும் போதும், வேலைவாய்ப்புகளுக்கான நேர்முகத்தேர்வு மற்றும் பிற நாடுகளில் பணிபுரியும் போதும் ஆங்கில உரையாடல் என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.ஆங்கில மொழியில் சரளமாக உரையாட பயிற்சி அளித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தும்போது மாணவர்களின் ஆங்கில பேச்சாற்றலை கண்டிப்பாக வளர்க்க முடியும்.இதனால், மாணவர்களின் ஆங்கில பேச்சாற்றல் அதிகரிப்பதோடு ஆங்கில பாடத்தை சுயமாக கற்றறிந்து, படித்த பாடத்தின் கருத்துகளை வெளிப்படுத்தும் திறனை வளர்க்க முடியும்.ஆங்கில மொழியில் சரளமாக உரையாட பயிற்சி அளித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தும்போது மாணவர்களின் ஆங்கில பேச்சாற்றலை கண்டிப்பாக வளர்க்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×