என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
அரசு பணியாளர்களுக்கு மின் ஆளுமை செயல்பாடு பயிற்சி

- கோப்புகள் பராமரிப்பில் எளிய நடைமுறை ஆகியன இதன் நோக்கங்கள்.
- வருவாய் துறை மற்றும் கனிம வளத்துறைக்கு பயிற்சி நடைபெற்றது.
திருப்பூர்:
தமிழக அரசு துறைகளில் மின் ஆளுமை செயல்பாடு மூலம் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அலுவலகப் பணிகளில் காகிதப் பயன்பாடு குறைத்தல், நேர விரயம் தவிர்த்தல், அவசர மற்றும் முக்கிய தகவல்கள் உடனுக்குடன் பரிமாறுதல், கோப்புகள் பராமரிப்பில் எளிய நடைமுறை ஆகியன இதன் நோக்கங்கள்.
இதற்கான பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்டத்தில் உரிய துறை ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது.அவ்வகையில் அரசு துறைகளில் வருவாய் துறை, கனிம வள துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பேரூராட்சிகள் துறை ஊழியர்களுக்கு இதற்கான பயிற்சி முதல் கட்டமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில் வருவாய் துறை மற்றும் கனிம வளத்துறைக்கு பயிற்சி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மற்றும்9 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இ - ஆபீஸ் நடைமுறை குறித்த பயிற்சி, மாநகராட்சி வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் நடந்தது.இ-சிஸ்டம்ஸ் அலுவலர்கள் முத்துக்குமார், சம்பத்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். அடுத்த கட்டமாக ஊரக வளர்ச்சி மற்றும் பேரூராட்சி துறை ஊழியர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.