என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயத்தில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
    X

    காங்கயம் நகர பா.ஜ.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

    காங்கயத்தில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

    • மாநில செயலாளர் மலர்க்கொடி, மாவட்ட துணைத்தலைவர் கலாநடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • காங்கயம் அருகே நால்ரோடு பகுதியில் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காங்கயம்:

    பால், மின்கட்டணம் உயர்வை கண்டித்து காங்கயம் நகர பஸ் நிலைய வளாகத்தில் காங்கயம் நகர பா.ஜ.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கயம் நகர தலைவர் சிவப்பிரகாஷ் தலைமை தாங்கினார். பா.ஜ.க. திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் என்.ரவி, மாநில செயலாளர் மலர்க்கொடி, மாவட்ட துணைத்தலைவர் கலாநடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் காங்கயம் அருகே நால்ரோடு பகுதியில் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×