என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புபடம்.
கொக்கம்பாளையம் மின்நுகர்வோர் செப்டம்பர் மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் - தாராபுரம் மின் அதிகாரி வேண்டுகோள்
By
மாலை மலர்23 Nov 2023 11:05 AM IST (Updated: 23 Nov 2023 11:05 AM IST)

- சென்ற மாத கணக்கீட்டு தேதியை இம்மாத தேதியாக எடுத்துக்கொண்டு அந்த தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் பணத்தை மின் வாரியத்திற்கு செலுத்துமாறு அறிவிக்கப்படுகிறது.
- தவறும் பட்சத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மின் விநியோகம் துண்டிப்பு செய்யப்படும்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தாராபுரம் கோட்டத்தில் வடக்கு குண்டடம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட கொக்கம்பாளையம் மின் பகிர்மானத்திற்கு நிர்வாகக் காரணத்தினால் 11/2023 நவம்பர் மாத மின் கணக்கீட்டு பணிகள் மேற்கொள்ள இயலவில்லை.
ஆகவே மின்நுகர்வோர் 9/2023 செப்டம்பர் மாதம் கட்டிய மின்கட்டணத்தொகையையே நவம்பர் மாதத்திற்கு செலுத்த வேண்டும். மின் பயனீட்டாளர்கள் சென்ற மாத கணக்கீட்டு தேதியை இம்மாத தேதியாக எடுத்துக்கொண்டு அந்த தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் பணத்தை மின் வாரியத்திற்கு செலுத்துமாறு அறிவிக்கப்படுகிறது.தவறும் பட்சத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மின் விநியோகம் துண்டிப்பு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
X