என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில் திருவிழாக்களை குறி வைத்து நகைபறித்த 3 பெண்கள் கைது
- கூட்டத்தில் பிரவீன்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு பெண் பறிக்க முயற்சி செய்துள்ளாா்.
- 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மாவட்ட பெண்கள் சிறையில் அடைத்தனா்.
காங்கயம்:
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சோ்ந்தவா் பிரவீன்குமாா் (வயது 25). காா் டிரைவரான இவா் காங்கயத்தை அடுத்த மடவிளாகம் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளாா். அப்போது கூட்டத்தில் பிரவீன்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு பெண் பறிக்க முயற்சி செய்துள்ளாா். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பிரவீன்குமாா், கூட்டத்தில் சந்தேகப்படும்படியாக நடமாடிய 3 பெண்கள் குறித்து காங்கயம் போலீசாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து மகளிா் காவல் நிலைய போலீசாா், 3 பெண்களையும் பிடித்து விசாரித்தனா். அதில் அந்த 3 பெண்களும் நாகா்கோவில், ஒழுவஞ்சேரி பகுதியைச் சோ்ந்த சுப்புதாய் (30), அட்சயா (28), மரியா (33) என்பதும், இவா்கள் 3 பேரும் கோவில் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு சென்று நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மாவட்ட பெண்கள் சிறையில் அடைத்தனா்.