search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    கோப்புபடம். 

    திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

    • திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.
    • பேருந்து நிலையத்தின் அருகே உள்ள பாலத்தின்கீழ் இரு புறமும் பலா் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.சுந்தரபாண்டியன், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜூக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை சரிவர திட்டமிடாமல் கட்டப்பட்டதன் விளைவாக பெருமாள் கோவில் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் வாகனங்களும் ஒரே பகுதியில் வரும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பெருமாள் கோவில் வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து திரும்பும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தனியார் ஸ்வீட்ஸ் கடை எதிரில் பாலத்துக்கு கீழ் செல்லும் வகையில் வழி ஏற்படுத்திக் கொடுத்தால் விபத்துகளைத் தவிா்க்கலாம்.

    மேலும் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள பாலத்தின்கீழ் இரு புறமும் பலா் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனா். இத்தகைய சூழ்நிலையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அங்கு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு பதாகை வைத்துள்ளது போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கும். ஆகவே, மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து பழைய பேருந்து நிலையம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×