என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அட்சய திருதியை தினத்தில்  குழந்தைகள் திருமணம் நடைபெற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் வினீத் எச்சரிக்கை
    X

    கோப்புபடம். 

    அட்சய திருதியை தினத்தில் குழந்தைகள் திருமணம் நடைபெற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் வினீத் எச்சரிக்கை

    • குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
    • குழந்தை திருமணங்கள் நடைபெற்றால், கண்டறிந்து, சம்பந்தப்பட்டோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர்:

    அட்சய திருதியை யையொட்டி குழந்தை திருமண ங்கள் நடைபெறு வதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இதுகுறித்து கலெக்டர் வினீத் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வரும் 22 ம் தேதி அக்ஷய திருதியை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, குழந்தை திருமணங்கள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், அனைத்து மகளிர் போலீசார், சைல்டு லைன், ஹிந்து அறநிலையத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையம், சமூக நல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர்கள், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

    குழந்தை திருமணங்கள் நடைபெற்றால், கண்டறிந்து, சம்பந்தப்பட்டோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×