search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்களுக்கான சுயமதிப்பீடு - நவம்பர் 4-ந்தேதிக்குள் முடிக்க உத்தரவு
    X

    கோப்புபடம். 

    ஆசிரியர்களுக்கான சுயமதிப்பீடு - நவம்பர் 4-ந்தேதிக்குள் முடிக்க உத்தரவு

    • கொரோனா காரணமாக 2020 - 21ம் கல்வியாண்டுக்கான மதிப்பீட்டை வரும் நவம்பர் 4-ந் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும்.
    • கொரோனா காரணமாக 2020 - 21ம் கல்வியாண்டுக்கான மதிப்பீட்டை வரும் நவம்பர் 4-ந் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும்.

    தாராபுரம்:

    மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து ஆசிரியர்களும் தங்கள் செயல்திறனை சுயமதிப்பீடு செய்து மேம்படுத்திக்கொள்ள, PINDIC என்ற செயலியை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கடந்த, 2019ல் அறிமுகப்படுத்தியது.

    1 முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து ஆசிரியர்களும், இந்த மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும். இதற்கென ஆசிரியர்களுக்கு, 10 மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது. இதற்குரிய படிவங்கள் 'எமிஸ்' தளத்தில் பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தலைமையாசிரியர் மேலாய்வு செய்து உரிய தரநிலை வழங்குவார்.பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர்களின் செயல்திறன்கள் ஆராயப்படுகின்றன. கொரோனா காரணமாக 2020 - 21ம் கல்வியாண்டுக்கான மதிப்பீட்டை வரும் நவம்பர் 4-ந் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும்.

    நடப்பாண்டுக்கான மதிப்பீட்டை மேற்கொள்ள, 2023 ஜனவரி 25-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இணையதள செலவினங்களுக்காக, ஆசிரியர் ஒருவருக்கு, 10 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×