search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் மாநில தடகள போட்டிக்கு தேர்வு
    X

    மாநில தடகள போட்டிக்கு தேர்வான விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள். 

    விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் மாநில தடகள போட்டிக்கு தேர்வு

    திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அளவிலான தடகள போட்டி பல்லடம் அம்பாள் புரொபஷனல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    போட்டியில் 14 வயதிற்குட்பட்டோர் மாணவர் பிரிவில் குண்டுஎறிதல் போட்டியில் 9-ம் வகுப்பு மாணவன் ஆர்.கோகுல் 2-ம் இடமும், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் பிளஸ்-1 மாணவர் பி.சந்துரு 2-ம் இடமும், 17 வயதிற்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் 9-ம் வகுப்பு மாணவி எம்.வைஷ்ணவி முதலிடமும், 17 வயதிற்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில் மும்முறை தாண்டுதல் போட்டியில் 9-ம் வகுப்பு மாணவி ஜி.ஆதியா 2-ம் இடமும், 100 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் இடமும் பிடித்தார். 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆதியா, வைஷ்ணவி, சுதீபா, சர்விகா, கார்னிகா ஆகியோர் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற 2 மாணவர்களும், 5 மாணவிகளும், செங்கல்பட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×