என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஓ.எம்.எஸ். மருத்துவமனை சார்பில் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
- குழந்தைகள் நல மாதத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
திருப்பூர் :
திருப்பூர் ஸ்மார்ட்சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஓ.எம்.எஸ். மருத்துவமனை சார்பில் குழந்தைகள் நல மாதத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுனர் இளங்குமரன் கலந்து கொண்டார். கவுரவ விருந்தினராக திருப்பூர் ஸ்மார்ட்சிட்டி ரோட்டரி சங்க பட்டைய தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ரத்ததான முகாம் தலைவர் கணேசமூர்த்தி , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், துணை ஆளுனர் கவிதாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஓ.எம்.எஸ். மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ரவிச்சந்திரன், தலைமை கதிரியக்க நிபுணர் டாக்டர் சரோஜா, தலைமை காயம் மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் அருள்ஜோதி, ேராட்டரி நிர்வாகிகளான தலைவர் ஜெயராமன், செயலாளர் பாலகணேசன், பொருளாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.