search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிரந்தர பணியிடங்களை ஒழிக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும் -   மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கத்தினர் மனு
    X

    திருப்பூர் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமாரிடம் மனு வழங்கிய காட்சி.

    நிரந்தர பணியிடங்களை ஒழிக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும் - மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கத்தினர் மனு

    • அரசாணை 152 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 1539 பணியிடங்களில் 254 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழக அரசு கடந்த மாதம் 22ஆம் தேதி கொண்டுவரப்பட்ட அரசாணை 152 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த அரசாணை காரணமாக சென்னை தவிர்த்து மீதமுள்ள 20 மாநகராட்சிகளில் 35,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் 3,417 பணியிடங்களாக குறைக்கப்பட்டும். திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 1539 பணியிடங்களில் 254 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. 1285 பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பணியாளர்கள் பாதிக்கப்படுவதோடு , மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் எனவே இதன் காரணமாக மாநகராட்சி நிர்வாகம் தனியார் மயமாக்கப்படும் சூழல் ஏற்படுவதாகவும் எனவே தமிழக அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்வதற்கான அரசாணை 152ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சங்கத்தின் தலைவர் சுஜாத் அலி, செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் முருகன், அமைச்சூர் சங்க செயலாளர் தங்கவேல், வருவாய் ஊழியர்கள் சங்க தலைவர் ராஜு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரம ணியம் ஆகியோரிடம் மனு கொடு த்தனர்.

    Next Story
    ×