என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் நோயாளிகள் அவதி திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் நோயாளிகள் அவதி](https://media.maalaimalar.com/h-upload/2023/07/19/1918101-untitled-2.webp)
தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள்.
திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் நோயாளிகள் அவதி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- உள் நோயாளியாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- அவசர சிகிச்சைக்காக வரும் ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் ஏராளமானோர் உள் நோயாளியாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளும் வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் தாறுமாறாக நிறுத்தி செல்வதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சைக்காக வரும் ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.