என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புபடம்
அய்யம்பாளையம் கருப்பண்ணசாமி கோவிலில் பொங்கல் திருவிழா
By
மாலை மலர்21 July 2023 3:49 PM IST

- கோவிலில் 14ம் ஆண்டாக பொங்கல் திருவிழா நடைபெற்றது.
- பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காவடி ஆட்டம் நடைபெற்றது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் ஏரி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 14ம் ஆண்டாக பொங்கல் திருவிழா நடைபெற்றது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்தனர்.
பின்னர் மாவிளக்கு எடுத்து வந்து அலங்கார சிறப்பு பூஜைகள் செய்தனர். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காவடி ஆட்டம் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
X