என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பல்லடம் - பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின்தடை பல்லடம் - பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின்தடை](https://media.maalaimalar.com/h-upload/2022/09/02/1755300-untitled-1.jpg)
கோப்புபடம்.
பல்லடம் - பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின்தடை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.
பலல்டம் :
பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 3-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா், அம்மாபாளையம், பனப்பாளையம்.
பெருமாநல்லூா் துணை மின் நிலையம், கணக்கம்பாளையம் மின் அழுத்த பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
மின் தடைபடும் பகுதிகள்: ரோஜா காா்டன், பொடாரம்பாளையம், செந்தில் நகா், பாலாஜி நகா், தாண்டாகவுண்டன் புதூா், அம்மாள் நகா், காளிபாளையம் ஆதிதிராவிடா் காலனி.