என் மலர்
உள்ளூர் செய்திகள்
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 148 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல்
- 1.61 கோடி ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கப்பட்டுள்ளது.
- 15 ஆயிரத்து 500 டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அவிநாசி :
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் முதன்முறையாக கொப்பரை கொள்முதல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 148 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு 1.61 கோடி ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கப்பட்டுள்ளது.
ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் தற்போது நாபெட் வாயிலாக கொப்பரை கொள்முதல் நடந்துவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், பொங்கலூர், பெதப்பம்பட்டி, அலங்கியம், மூலனூர், உடுமலை என 6 மையங்களில் கொப்பரை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு மொத்தம் 15 ஆயிரத்து 500 டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இதில் அவிநாசி, குன்னத்தூர் சுற்றுவட்டார விவசாயி கள் பயன்பெறும் வகையில் அவிநாசி, சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை கொள்முதல் அனுமதிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில் அங்கு 1,000 மெட்ரிக்., டன் அளவுக்கு கொப்பரை கொள்முதல் செய்ய மார்க்கெட்டிங் கமிட்டி அனுமதி வழங்கியது. இதையடுத்து அங்கும் கொப்பரை கொள்முதல் நடந்து வருகிறது.கண்காணி ப்பாளர் சந்திரமோகன் கூறுகையில், கொப்பரை கொள்முதலில்160 விவசாயிகள்பதிவு செய்துள்ளனர். இதுவரை 106 விவசாயிகளிடம் இருந்து 2,965 மூட்டையில் 148 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நாபெட் கொள்முதல் விலை அடிப்படையில் 1.61 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தேவையான குடோன் வசதி இருப்பதால் விவசாயிகள் கொப்பரைக்கு அரசின் கொள்முதல் விலை பெறலாம் என்றார்.