என் மலர்
உள்ளூர் செய்திகள்
வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணி - திருப்பூர் மாவட்டத்துக்கு 1.50 லட்சம் படிவங்கள்
- பட்டியல் வெளியான பிறகு படிவங்கள் வந்துசேரும்.
- விண்ணப்ப படிவங்கள் சட்டசபை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்படும்.
திருப்பூர் :
இந்திய தேர்தல் கமிஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது. தகுதியான வாக்காளர் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடக்கும்.வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள போட்டோவை மாற்றவும், முகாமில் விண்ணப்பிக்கலாம். நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சுருக்கமுறை திருத்த பணி நடக்க உள்ளது. அதற்காக மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கு 1.50 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வந்துள்ளன.வரைவு பட்டியல் வெளியான பிறகு படிவங்கள் வந்துசேரும். இ
ந்தாண்டு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த விண்ணப்ப படிவங்கள் சட்டசபை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்படும். பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, வாக்காளர்கள் தற்போதும் விண்ணப்பிக்கலாம்.தாலுகா அலுவலகங்களில் தேவையான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.