search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில்  சாலை பாதுகாப்பு ஐடியத்தான் பரிசளிப்பு விழா
    X

     கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்ற காட்சி.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஐடியத்தான் பரிசளிப்பு விழா

    • புதுமையான தீர்வுகளை வழங்கியவர்களுக்கு பரிசு களை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்
    • விழிப்பு ணர்வு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருப்பூர் மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு மற்றும் ஸ்டார்டப் டி.என் இனைந்து தயாரிக்கப்பட்டுள்ள விபத்தில்லா திருப்பூர் சாலை பாதுகாப்பு ஐடியத்தான் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் சாலைப் பாதுகாப்புக் குறித்து புதுமையான தீர்வுகளை வழங்கியவர்களுக்கு பரிசு களை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் சாலை விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்பு ணர்வு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில், திருப்பூர் மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு மற்றும் ஸ்டார்டப் டி.என் இனைந்து தயாரிக்கப்பட்டுள்ள "விபத்தில்லா திருப்பூர்" சாலை பாதுகாப்பு ஐடியத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. விபத்தில்லா திருப்பூர் உருவாக்கும் வகையில் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு, விபத்திற்கு முன்னும், பின்னும் கண்டறிதல், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பொதுவான திட்டங்கள், அதிக விபத்து ஏற்படும் இடங்கள் கண்டறிதல். தலைகவசம் அணியாமல் வருபவர்களை கண்டறிதல், அதிக வேகத்தில் வாகனம் இயக்குவதை கண்டறிதல் உள்ளிட சாலைப் பாதுகாப்புப்பை மேம்படுத்துவது குறித்து புதுமையான தீர்வுகளை வழங்க பல்வேறு தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்ற க்கப்பட்டது. இதில் ஸ்டார்டப் டி.என் இருந்து 43 விண்ணப்ப ங்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களிடமிருந்து 378 விண்ணப்பங்களும், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களிடமிருந்து 26 விண்ணப்பங்களும் பெறப்பட்டது.

    பெறப்பட்ட விண்ண ப்பங்கள் சமந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னிலையில் மதிப்பீடு செய்யும் பணி நடை பெற்றது. இதில் புதுமையான தீர்வுகளை வழங்கியவர்களின் கருத்துக்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் சிறந்த தீர்வுகளை வழங்கியவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட சாலை பாதுகாப்புக்குழுவினரிடம் சமர்பிக்கப்பட்டது. மேலும், சாலை பாதுகாப்புக்குழு ஆலோசனை மேற்கொண்டு சிறந்த சாலைப்பாதுகாப்பு குறித்து தீர்வுகளை வழங்கிய நபர்கள் தேர்வு செய்யப்பட்டு இன்றைய தினம், சிறப்பாக புதுமையான தீர்வுகளை வழங்கிய ஸ்டார்டப் டி.என் பிரிவில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.30 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.20 ஆயிரம் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.30 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.15 ஆயிரம் தன்னார்வலர்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் இறுதி சுற்றுவரை கலந்து கொண்டவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் என 22 நபர்களுக்கு பரிசுகான காசோலைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கல்லூரி மாணக்கார்கள், தன்னார்வலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×