என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரி ஆண்டு விழா
- நற்கருைண நாதர் ஆலய பங்குதந்தை ஜெபாஸ்டின் மரிய சுந்தரம் கலந்து கொண்டனர்.
- சுற்றுச்சூழலை மையப்படுத்தி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருப்பூர் :
திருப்பூர் காங்கயம் சாலை செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் 20-வது ஆண்டு விழா கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விவசாய தொழில் முன்னேற்ற அமைப்பு இயக்குனர் சோமசுந்தரம் மற்றும் நல்லூர் நற்கருைண நாதர் ஆலய பங்குதந்தை ஜெபாஸ்டின் மரிய சுந்தரம் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற 3 மாணவிகள், மேலும் தரவரிசை மதிப்பீடு பெற்ற 12 மாணவிகள் மற்றும் கல்வி, விளையாட்டில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பரிசு , சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழலை மையப்படுத்தி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.