என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![உடுமலையில் பூஜ்ய நிழல் நிகழ்வை கண்டுகளித்த மாணவர்கள் உடுமலையில் பூஜ்ய நிழல் நிகழ்வை கண்டுகளித்த மாணவர்கள்](https://media.maalaimalar.com/h-upload/2023/04/18/1867950-untitled-1.webp)
ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் பூஜ்ய நிழல் கண்டு களித்த காட்சி.
உடுமலையில் பூஜ்ய நிழல் நிகழ்வை கண்டுகளித்த மாணவர்கள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க ப்பள்ளி மாணவர்கள் எளிய பொருட்களின் உதவியால் கண்டு களித்தனர்.
- வானியலில் ஆர்வத்தை ஏற்படுத்துவ தற்காக இது போன்ற நிகழ்வுகள் ஊக்கப்படுத்த படுகிறது.
உடுமலை :
சூரியனால் உருவாகும் ஒரு பொருளின் நிழல் சூரிய உதயத்தில் அதிக நீளத்தோடு இருக்கும். இந்த நிழலானது நீளத்தில் குறைந்து கொண்டே வந்து உச்சி வேளையில் மிகக்கு றைந்து, பின் மீண்டும் சூரியன் மறையும் வரை வளர்ந்து அதிகமாகிக் கொண்டே செல்லும்.ஓர் வருடத்தின்இரண்டு நாட்களில் மட்டும் பொருளின் நிழலானது அப்பொருளுக்கு மிகச் சரியாக கீழே விழுவதால் நம்மால் அப்பொருளின் நிழலைக் உச்சி மதிய வேளையில்காண இயலாது. அந்த நாட்கள் நிழல் காணஇயலா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்றழைக்கப்படுகிறது.இந்த அரிய வானியல் நிகழ்வை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க ப்பள்ளி மாணவர்கள் எளிய பொருட்களின் உதவியால் கண்டு களித்தனர்.
அறிவியலில் உற்றுநோக்கும் திறனை மேம்படுத்து வதற்காகவும் வானியலில் ஆர்வத்தை ஏற்படுத்துவ தற்காகவும் இது போன்ற நிகழ்வுகள் ஊக்கப்படுத்த படுகிறது.ஆசிரியர் கண்ணபிரான் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.