என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திருப்பூர் முருகன் கோவில்களில் சூரசம்ஹார ஏற்பாடுகள் தீவிரம் திருப்பூர் முருகன் கோவில்களில் சூரசம்ஹார ஏற்பாடுகள் தீவிரம்](https://media.maalaimalar.com/h-upload/2023/11/16/1982098-soorasamharam.webp)
சூரபத்மன் சிலைக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெறுவதை படத்தில் காணலாம்.
திருப்பூர் முருகன் கோவில்களில் சூரசம்ஹார ஏற்பாடுகள் தீவிரம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடந்து வருகிறது.
- பொதுமக்கள் குடும்பத்தோடு கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்
திருப்பூர் :
முருகப்பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி விழா திருப்பூரில் உள்ள முருகன் கோவில்கள் மற்றும் பல கோவில்களில் நடந்து வருகிறது. இதையொட்டி காலையில் சிறப்பு அபிஷேக பூஜைகளும் பின்னர் சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். இதேபோல் பொதுமக்கள் குடும்பத்தோடு கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்கின்ற சூரசம்ஹாரம் திருப்பூரில் உள்ள கோவில்களில் வருகிற 18-ந்தேதி(சனிக்கிழமை) மாலை நடைபெறுகிறது.
இதையொட்டி திருப்பூர் ஈஸ்வரன் கோவில், கொங்கணகிரி கந்தபெருமான் கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோவில் உள்பட திருப்பூரில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சூரபத்மன் சிலைக்கு வர்ணம் பூசி தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சூரசம்ஹாரத்திற்கு பின் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.