என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![உடுமலை அருகே டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை உடுமலை அருகே டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை](https://media.maalaimalar.com/h-upload/2022/08/21/1749549-untitled-1.jpg)
கோப்புபடம்.
உடுமலை அருகே டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
- பூஜை அறைக்குள் சென்ற லோகநாதன் கதவைஅடைத்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார்.
உடுமலை :
உடுமலை அடுத்த சிவசக்தி காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 53). இவர் ஒரு ஓட்டலில் டீ மாஸ்டாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தனியார் மில்லில் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ராஜசேகர் (18), யுவராஜ்( 16 )ஆகிய இரு மகன்கள் உள்ளனர். குடி பழக்கத்திற்கு அ டிமையான லோகநாதன் கடந்த இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். சம்பவதன்று வீட்டில் லோகநாதன் அவருடைய மனைவி மற்றும் இளைய மகன் யுவராஜ் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது லோகநாதன் தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளார் தூக்க மாத்திரை சாப்பிடும் பழக்கம் லோகநாதனுக்கு இருந்ததால் அதனை வீட்டில் உள்ளவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இதனை அடுத்து பூஜை அறைக்குள் சென்ற லோகநாதன் கதவைஅடைத்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார். இதனால் சந்தேகம் அடைந்த யுவராஜ் வீட்டின் பின்பக்கம் உள்ள ஜன்னல் வழியாக பார்த்தபோது லோகநாதன் ஒரு சேலையில் தூக்கு மாட்டிக் கொண்டிருந்தார். உடனடியாக யுவராஜ் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு தூக்கில் தொங்கிய லோகநாத னை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த உடுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.