என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமார்.
பல்லடம் அருகே செல்போன் திருடிய வாலிபர் கைது

பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் வசித்து வரும் தனபால்(வயது 18) என்பவர் கடந்த 29.12.22 ம் தேதி காரணம்பேட்டை நால்ரோடு சிக்னல் அருகே நடந்து வரும் போது தனது சட்டை பையில் இருந்த செல்போனை பேசுவதற்காக எடுத்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அவரது செல்போனை பறித்துச் சென்று விட்டதாக தனபால் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பல்லடம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையில் போலீசார் பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோடு உடுமலை பிரிவு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகத்தின் பேரில் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில்29.12.2022 ந் தேதி இரவு காரணம்பேட்டை பகுதியில் தனபாலிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். அதனையடுத்து செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை பள்ளிக்கரனை மனோகர் நகரை சேர்ந்த ராஜூ மகன் சந்தோஷ்குமார்,(33) என்பவரை பல்லடம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.