என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
பயங்கரவாத செயல்களுக்கு வாகனங்கள் திருட்டு
- கர்நாடக மாநிலம் மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்துள்ளது.
- கடவுள்தான் அதிகாரிகளுக்கு பிச்சை போட்டு வருகிறார்.
உடுமலை :
பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்த ஏராளமான வாகனங்கள் திருடப்பட்டும் மோசடியாக பறிக்கப்பட்டும் வருகிறது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.
இது குறித்து அவர் தி உடுமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடக மாநிலம் மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்துள்ளது. இதில், ஈடுபட்ட முகமது ஷாரிக், கோவை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வந்து சென்றுள்ளார். கோவையில் கார் வாங்கி கொடுத்தவரை கைது செய்த போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை
கோவை, உடுமலை பகுதிகளில் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்த ஏராளமான வாகனங்கள் திருடப்பட்டும், மோசடியாக பறிக்கப்பட்டும் வருகிறது.
இதனால் இன்னும் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கும் ஆபத்து உள்ளது. போலீசார் வாகனத்திருட்டு உள்ளிட்டவை குறித்து விசாரிக்க வேண்டும்.சிலை கடத்தல் தடுப்புப்பிரிவில் பொன்மாணிக்கவேல் சிறப்பாக பணியாற்றினார். அவர் அறநிலையத்துறையே தேவையில்லை, கடவுள்தான் அதிகாரிகளுக்கு பிச்சை போட்டு வருகிறார் என கூறியுள்ள கருத்தை வரவேற்கிறோம்.
உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்தும், வெள்ளோட்டம் விடப்படாமல் தேர்நிலை காலியாக உள்ளது.பழைய தேர் பாதுகாப்பில்லாமல் உள்ளது. கந்த சஷ்டி விழாவுக்கு வெள்ளி வேல் வைக்காமல் ஆகமம், வழிபாட்டு முறையை சிதைத்துள்ளனர். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட இந்த கோவில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.