என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கல்குவாரி லாரியை மறித்ததால் பரபரப்பு
Byமாலை மலர்30 Sept 2022 2:14 PM IST
- அத்துமீறி குவாரிக்குள் நுழைந்து லாரியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- பல்லடம் போலீசில் புகார் செய்தார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் லாரி குவாரியில் இருந்து மண் எடுத்து வரும்போது அவிநாசியை சேர்ந்த விஜயகுமார் ,சக்திவேல், விஜயன், கணேஷ் , மகாசாமி உள்ளிட்ட 5 நபர்கள் அத்துமீறி குவாரிக்குள் நுழைந்து லாரியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குவாரி மேற்பார்வையாளர் திருநாவுக்கரசு பல்லடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X