என் மலர்
உள்ளூர் செய்திகள்
சாமளாபுரத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்
- அய்யம்பாளையம் குபேர விநாயகர் கும்பாபிஷேக விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
- அப்போது பொதுமக்களிடம் பெறப்பட கோரிக்கை மனுக்களை பெற்று அதற்குரிய அதிகாரிகளிடம் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அறிவுறுத்தினார்.
மங்கலம்:
சாமளாபுரம் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் அய்யம்பாளையம் குபேர விநாயகர் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் மக்களுக்கான குறைகளை கேட்டறிந்து அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். அதிகாரிகளிடம் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அறிவுறுத்தினார்.
இதில் சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி மற்றும் சாமளாபுரம் பேரூராட்சியின் 5 -வது வார்டு உறுப்பினரும் தி.மு.க. நகரச் செயலாளருமான வேலுசாமி, வா- அய்யம்பாளையம் கிளைச் செயலாளர் சண்முகம், தி.மு.க. மூத்த நிர்வாகி பறையாகாடு மணி, கந்தசாமி, உதயக்குமார், ஆறுமுகம், திருப்பூர் மாவட்ட அறநிலையத்துறை தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், காளிபாளையம் 9-வது வார்டு மகாலட்சுமி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.