search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
    • 11 நாட்களுக்கு மகா தீபத்தை பக்தர்கள் தரிசிக்கலாம்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. காவல் தெய்வம் துர்க்கை அம்மன், பிடாரி அம்மன், விநாயகர் உற்சவத்தை தொடர்ந்து, கடந்த 17-ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது.

    இதையடுத்து பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, கடந்த 26-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர்

    சந்நிதி முன்பு பரணி தீபமும், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட்டது.

    இதையடுத்து ஐயங்குளத்தில் 3 நாள் தெப்பல் உற்சவம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.

    சந்திரசேகரர், பராசக்தி அம்மன், முருகர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீப தரிசனம் 5-வது நாளாக நேற்றும் பிரகாசித்தது. ஜோதி வடிவமாக காட்சி கொடுத்த அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். 11 நாட்களுக்கு மகா தீபத்தை பக்தர்கள் தரிசிக்கலாம்.

    மலை உச்சியில் இருந்து 12-வது நாள், மகா தீப கொப்பரை அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.

    பின்னர், கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட தீப மை, ஆரூத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு சாற்றப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் 17 நாட்களாக நடைபெற்று வந்த கார்த்திகை தீபத் திருவிழா, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நேற்று இரவு நிறைவு பெற்றது. வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சாமி, மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • பா.ம.க. பிரமுகர் கைது
    • போலீசில் புகார்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் ரீனா இளவரசி (வயது 40). தி.மு.க. மாவட்ட சமூக வலைதள பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார்.

    இந்த நிலையில் செய்யாறு சிப்காட் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சியை கைவிடக் கூறி பா.ம.க.வினர் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அப்போது பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார், அமைச்சர் எ.வ.வேலு குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரீனா இளவரசி சமூக வலை தளத்தில் பதிவிட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து வந்தவாசி கிழக்கு ஒன்றிய பா.ம.க. முன்னாள் செயலாளர் கீழ்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரபுதேவா (27) என்பவர் ரீனா இளவரசியின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஆபாச வார்த்தையை கூறி பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரீனா இளவரசி வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று பிரபு தேவாவை கைது செய்தனர். தகவல் அறிந்த பா.ம.க. வினர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையில் பிரபுதேவாவின் மனைவி சங்கீதா (23) என்பவர், ரீனாஇளவரசி சமூக வலைதளத்தில் தன்னை இழிவாக பேசி பதிவிட்டுள்ளார் என்று கூறி டி.எஸ்.பி. ராஜூவிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாடிக்கையாளர்கள் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களிடம் கேட்டனர்.
    • குழந்தைகள் சாப்பிடும் இதுபோன்ற உணவுப் பொருட்கள் காலாவதி ஆகிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பெரிய கடை வீதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்காக ஆரணியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார்.

    குழந்தைகளுக்கு பிடித்தமான முந்திரி, திராட்சை, பாதாம், பேரிச்சம் அடங்கிய பாக்கெட்டை வாங்கினார்.

    அப்போது அந்த பாக்கெட்டில் உயிருடன் பூச்சி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் மற்ற வாடிக்கையாளர்களிடம் காண்பித்தார்.

    வாடிக்கையாளர்கள் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் சரிவர பதில் அளிக்காமல் வேறு பாக்கெட் மாற்றி எடுத்து செல்லுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளித்தார். குழந்தைகள் சாப்பிடும் இதுபோன்ற உணவுப் பொருட்கள் காலாவதி ஆகிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.

    இதனை சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிராம மக்கள் அனைவரும் சிறுமிக்கு சந்தன நலங்கு மற்றும் குங்குமம் வைத்து, பன்னீர் தெளித்து வாழ்த்தினர்.
    • சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்ட ரத்தினம் குடும்பத்தினர் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    செய்யாறு:

    செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள மதுராந்தகம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவர் 'ராசாத்தி சர்க்கஸ்' என்ற பெயரில் கிராமம், கிராமமாக சென்று கடந்த 40 ஆண்டுகளாக சர்க்கஸ் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

    இவருடன் மனைவி சுலோச்சனா, மகன், 2 மகள்கள் மற்றும் உறவினர்கள் என 10 பேர் சர்க்கஸ் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    ரத்தினம் குழுவினர் கடந்த 23-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே உள்ள மோரணம் கிராமத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்த வந்தனர்.

    பின்னர், அங்குள்ள பஜனை கோவில் தெருவில் டெண்ட் அமைத்து கடந்த 4 நாட்களாக மாலை நேரத்தில் சர்க்கஸ் சாகசங்கள் செய்து வந்தனர்.

    இந்நிலையில், ரத்தினத்தின் இளைய மகள் ராசாத்தி (வயது 15) என்பவர் நேற்று முன்தினம் பூப்பெய்தினார்.

    இந்த தகவலறிந்த அப்பகுதி மக்கள் பூப்பெய்திய சிறுமி ராசாத்திக்கு கிராம மக்கள் சார்பில் மஞ்சள் நீராட்டு நடத்துவது என முடிவு செய்தனர்.

    சிறுமிக்கு புதிய சேலை, மாலை, கண்ணாடி, வளையல்கள், பொட்டு வகைகள், மை, பவுடர், பழங்கள், அரிசி, மளிகை பொருட்கள் என 50 வகையான சீர்வரிசை பொருட்களை வாங்கினர்.

    தொடர்ந்து, நேற்று மாலை கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள், பெண்கள், இளைஞர்கள் மேளவாத்தியங்களுடன் ஊர்வலமாக சென்று, சர்க்கஸ் கூடாரத்தில் அமர்ந்திருந்த சிறுமி ராசாத்திக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

    மேலும், சிறுமியை மஞ்சள் நீராட்டி நாற்காலியில் அமர வைத்து அவரது மாமா ராம்ராஜை மாலை அணிவித்து வாழ்த்த செய்தனர். தொடர்ந்து, கிராம மக்கள் அனைவரும் சிறுமிக்கு சந்தன நலங்கு மற்றும் குங்குமம் வைத்து, பன்னீர் தெளித்து வாழ்த்தினர்.

    இதைகண்ட சிறுமி ராசாத்தி, தந்தை ரத்தினம், தாயார் சுலோச்சனா மற்றும் உறவினர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

    அவர்கள் எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

    சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்ட ரத்தினம் குடும்பத்தினர் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்த சம்வம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • ரீனா இளவரசி வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார்.
    • தகவல் அறிந்த பா.ம.க. வினர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் ரீனா இளவரசி (வயது 40). தி.மு.க. மாவட்ட சமூக வலைதள பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார்.

    இந்த நிலையில் செய்யாறு சிப்காட் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சியை கைவிடக் கூறி பா.ம.க.வினர் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அப்போது பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார், அமைச்சர் எ.வ.வேலு குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரீனா இளவரசி சமூக வலை தளத்தில் பதிவிட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து வந்தவாசி கிழக்கு ஒன்றிய பா.ம.க. முன்னாள் செயலாளர் கீழ்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரபுதேவா (27) என்பவர் ரீனா இளவரசியின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஆபாச வார்த்தையை கூறி பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரீனா இளவரசி வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று பிரபுதேவாவை கைது செய்தனர். தகவல் அறிந்த பா.ம.க. வினர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையில் பிரபுதேவாவின் மனைவி சங்கீதா (23) என்பவர், ரீனாஇளவரசி சமூக வலைதளத்தில் தன்னை இழிவாக பேசி பதிவிட்டுள்ளார் என்று கூறி டி.எஸ்.பி. ராஜூவிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது
    • ஏராளமானோர் மனு அளித்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சிவனுபாண் டியன் (தலைமையகம்), சவுந்தரராஜன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்பு பிரிவு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை போலீஸ் சூப்பி ரண்டுவிடம் வழங்கினர்.

    பெறப்பட்ட மனுக்கள் குறித்து அவர் விசாரணை மேற்கொண்டார் மேலும் சில மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

    இந்தமுகாமில் நிலப்பிரச்சினை, பணப்பிரச்சினை தொடர் பாக ஏராளமானவர்கள் மனு அளித்திருந்தனர்.

    • வருவாய்த்துறையினர் திடீர் சோதனை
    • 2 பேரிடம் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் வருவாய்த்துறையினர் திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் நேற்று திடீரென சோதனை செய்தனர்.

    அப்போது பெரியார் சிலை அருகே ஒரு பெட்டிக் கடையிலும், கன்னி கோவில் தெருவில் மற்றொரு பெட்டிக் கடையிலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. 2 கடைகளை வருவாய்த்துறையினர் பூட்டி சீல்வைத்தனர்.

    மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.எஸ்.பி. எச்சரிக்கை
    • 2 பேர் கைது

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதியில் குட்கா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்ப ட்டுள்ளன.

    இது சம்பந்தமாக வடுகசாத்து, அரையாளம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்றவற்றை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் ஆரணி டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற வியாபாரிகள்ஆலோசனை கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் சுப்பிரம ணியன் அனை வரையும் வரவேற்றார். டி.எஸ்.பி. ரவிசந்திரன் தலைமையில் தாங்கினார்.

    இதில் மொத்த வியாபாரிகள் மளிகை கடை வியாபாரிகள் சிறு குறு வியாபாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். டி.எஸ்.பி. ரவிசந்திரன் பேசியதாவது:-

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை வஸ்துக்களை வியாபாரிகள் விற்பனை செய்யப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

    அதே போல மற்ற வர்கள் விற்ப னை செய்தால் 10,581 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வியாபாரிகளை டி.எஸ்.பி ரவி சந்திரன் அறிவுறுத்தினார்.

    • மேல்மா சிப்காட்டுக்கு எதிராக நடத்தினர்
    • சென்னை கோட்டையை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை கைது செய்ததை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி விவசாயிகளுக்கு எதிரான நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 ஐ ரத்து செய்ய வேண்டும். காவிரியில் இருந்து உரிய தண்ணீரை தமிழக அரசு பெற்றுத்தர தவறிவிட்டது.

    விவசாயிகள் மீது கைது நடவடிக்கை எடுத்த தி.மு.க. அரசுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு தக்க பாடம் புகட்டுவோம்.

    சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்காக தொடர்ந்து விவசாயிகள் வஞ்சிக்க ப்பட்டால் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி சென்னை கோட்டையை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கிறோம் என தெரிவித்தார்.

    இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 3 நாட்களாக கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.
    • மகா தீபத்தை தரிசனம் செய்ய தொடர்ந்து பக்தர்கள் வருகை தருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி கடந்த 26-ந் தேதி நடைபெற்றது.

    அன்று காலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. மகா தீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    கடந்த 3 நாட்களாக கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று மாலை சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைகிறது. அப்போது சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வர உள்ளார்.

    மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் பிரகாசிக்கும். மாலை நேரத்தில் ஏற்றப்பட்டு தொடர்ந்து காட்சி அளிக்கும்.

    மகா தீபத்தை தரிசனம் செய்ய தொடர்ந்து பக்தர்கள் வருகை தருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

    இதனால் வருகிற 3-ந் தேதி வரை கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    • தெப்பல் உற்சவம் தொடங்கி நடந்து வருகிறது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் விநாயகர், முருகர் உள்ளிட்ட சாமிகள் வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி கடந்த 26-ந் தேதி நடந்தது. அன்று காலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. மகாதீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    தொடர்ந்து மறுநாள் பவுர்ணமி நீடித்ததாலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்பல் உற்சவம் தொடங்கி நடந்து வருகிறது.

    அய்யங்குளத்தில் 27-ந் தேதி சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நேற்று முன்தினம் பராசக்திஅம்மன் தெப்பல் உற்சவமும், நேற்று சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் தெப்பல் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவடைகிறது. கோவில் பின்புறம் உள்ள மலையில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். இதனை காண ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்தநிலையில் கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருகை தர உள்ளதால் வருகிற 3-ந்தேதி வரை கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • கண்காணிப்பு கேமராவில் சிக்கினர்
    • ஜெயிலில் அடைத்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே கீழ்சாத்தமங்கலம் கிராமம் அண்ணாநக ரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31), லாரி உரிமையாளர். இவர் கடந்த 26-ந் தேதி 2 லாரிகளை கீழ்சாத்தமங்கலம் பைபாஸ் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள தனியார் வாட்டர் சர்வீஸ் அருகில் நிறுத்திவிட்டு சென்றார்.

    மறுநாள் வந்து பார்த்தபோது லாரிகளில் இருந்த பெரிய பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சதீஷ்குமார் பொன்னூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தணிகை வேல் மற்றும் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சேத்துப்பட்டு தாலுகா, மேலத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (30), சிவா (29) ஆகியோர் பேட்டரியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பேட்டரிகள் திருடுவதற்காக பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×