search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • ரிஷபம் சிவனின் சின்னமாகவும், தர்ம தேவதையின் வடிவமாகவும் விளங்குகிறது
    • இரவு தொடங்கும் மாட வீதியுலா விடிய விடிய நடக்கிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா 5-ம் நாள் உற்சவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும்.

    கடந்த 17-ந் தேதி தொடங்கிய தீபவிழாவின் 5-ம் நாளான இன்று, 100 ஆண்டுகள் பழமை 32 அடி உயர பெரிய ரிஷப வாகனத்தில் அருணாசலேசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    இந்த ரிஷப வாகனம் நாட்டுக்கோட்டை நகரத் தார் சமூகத்தினரால் உரு வாக்கப்பட்டது. இது போன்ற பெரிய ரிஷப வாகனம் தேவகோட்டை பகுதியில் உள்ளது. விழாக் காலங்களில் அருணாசலே சுவரர் எழுந்தருளும் வாக னங்களில் மிகப்பெரியது இந்த ரிஷப வாகனம்.

    இந்த வாகனத்தில் மேல் அமைக்கப்படும் திருக்குடை மிகப்பிரம்மாண்டமானது. ரிஷபம் சிவனின் சின்னமாகவும், தர்ம தேவதையின் வடிவமாகவும் விளங்குகிறது. ரிஷப வாக னத்தின் கால்கள் நான்கும் ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்களை குறிப்பதாகும்.

    வேதரூபமாக ரிஷபம் கருதப்படுகிறது. இதனால் சிவனுக்கு வேதநாயகன் என்று பெயர். ரிஷபத்தில் எழுந்தருளும் சிவபெரு மானை குறிக்கும் வகையில் கிராமப்புறங்களில் 'மாட சாமி' என்று பெயர் வைப் பார்கள். மாடு (ரிஷபம்) ஏறிய சாமி (சிவன்) ஆவர்.

    ஆத்மாக்கள் முக்தி அடைய சிவனை வணங்குவதை தான் கோவில்களில் சிவனை நோக்கி ரிஷபங்கள் இருப்பது நமக்கு உணர்த்துகிறது. இது போன்ற சிறப்புகள் வாய்ந்த பிரம்மாண்டமான ரிஷப வாகனத்தில் வேதநாயகனாக அபிதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் இன்று இரவு 10 மணிக்கு மேல் எழுந்தருளுகிறார்.

    இரவு தொடங்கும் மாட வீதியுலா விடிய விடிய அதிகாலை வரை நடைபெற உள்ளது.

    • அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகர திமுக சார்பில் முத்து விநாயகர் கோவில் தெருவில் கருணாநிதி நூற்றாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் ஜீவரேகா விஜயராஜ், குட்டி புகழேந்தி, நகரமன்ற உறுப்பினர் ராணி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்ட பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    விழாவில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட அமைப்பாளர்கள் டிவிஎம் நேரு, ஏ.ஏ. ஆறுமுகம், இரா.கார்த்திகேயன், சர்தார், நகர மன்ற துணைத் தலைவர் சு.ராஜாங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணதாசன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கிரிக்கெட் ரவி, சமயராஜ், ராயல் தியாகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வக்கீல் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
    • 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்;

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீப தரிசனம் நவம்பர் 26-ந்தேதி நடைபெற உள்ளது.

    அதனை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வரும் கிரிவல பாதையை இன்று காலை தூய்மை அருணை தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அதன் நிறுவனரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு தூய்மை செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

    தூய்மை அருணை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்த தூய்மை பணியில் கலெக்டர் பா.முருகேஷ், கூடுதல் கலெக்டர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என். அண்ணாதுரை எம்.பி., நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், தொழிலாளர் நல மேம்பாட்டு பிரிவு அரசு பிரதிநிதி இரா. ஸ்ரீதரன், சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், கோட்டாட்சியர் மந்தாகினி, வட்டாட்சியர் தியாகராஜன், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன் உட்பட 1000-க்கும் மேற்பட்ட தூய்மை அருணை உறுப்பினர்கள், அனைத்து துறை தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது
    • கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த மேல் நகர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஜோதீஸ்வரி சமேத ஸ்ரீ ஜோதி நாகேஸ்வரர் கோவில் கும்பாபி ஷே கம் நடந்தது.

    இதனை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகாதீபா ராதனை காண்பி க்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து காலை 9 மணி அளவில் கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • விவசாயிக்கு சிகிச்சை
    • போலீசார் விசாரணை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அடுத்த வேளானந்தல் புதூர் கிராமத்தில் மின் கம்பம் விழுந்ததில் ஏர் உழுது கொண்டிருந்த காளை மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக பலியானது.

    திருவண்ணாமலை அடுத்த வேளானந்தல் புதூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்தி.

    இவர் நேற்று காலை தனக்கு சொந்தமான நிலத்தில் ஏர் உழுது கொண்டிருந்தார்.

    அப்போது அவரது நிலத்தில் இருந்த மின் கம்பம் விவசாயி மற்றும் உழவுக்கு பயன்படு த்தப்பட்ட காளைகள் மீது விழுந்துள்ளது.

    மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கியதில் ஒரு காளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது.

    விவசாயி சக்தி மற்றும் ஒரு காளை மின்சாரம் தாக்கியதில் படுகாயம் ஏற்பட்டது. சக்தியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சக்தியின் மனைவி மலர்கொடி அளித்த புகாரின் அடிப்படையில் வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உழவு பணியில் இருந்த காளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
    • யாகசாலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முக நாதர் கோவிலில் கந்த சஷ்டி, சூரசம்ஹாரத்தை தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகநாதர் சாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.

    இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மேளதாளத்துடன் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.

    பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டட வள்ளி, தெய்வானை, சண்முகநாதர் சாமிக்கு சிறப்பு யாகசாலை அமைத்து பூஜைகள் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், மகா தீபாரதனையும் நடந்தது. இதில் வந்தவாசியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கார்த்திகை தீப திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
    • அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் கிரிவல பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

    கார்த்திகை தீப திருவிழாவிற்கு வரும் ஆன்மீக பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது.

    கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்போடும், ஆன்மிக மக்கள் எல்லாம் பாராட்டும் அளவிற்கு சிறப்பாக நடை பெற்றது என தமிழ்நாடு முதல் - அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

    இந்த ஆண்டு தீபத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற வேண்டும் என கூறிய முதல் - அமைச்சர் கார்த்திகை தீபத்திருவிழா முடியும் வரை திருவண்ணாமலையில் தங்கி இருந்து பணிகளை கவனிக்க சொல்லி யிருக்கிறார்.

    அதன் அடிப்படையில் இன்று கிரிவலப்பாதையில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் பிரதானமாக பார்க்கப்படுவது 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை சுற்றி கிரிவலம் வருவது தான். 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப்பாதையில் ஆன்மிக மக்கள் காலணி அணியாமல் கிரிவலம் வருகின்றனர்.

    அதனால் பாதைகள் அனைத்தும் தூய்மையாக வைக்கப்படும். 24 மணி நேரமும் பக்தர்கள் கிரிவலம் வருவதால் இரவு நேரங்களில் தேவையான அளவு மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தேவையான அளவிற்கு கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியில் இருந்து கிரிவல ப்பாதையில் கேமராக்கள் அமைக்க நிதிகள் வழங்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள். கிரிவலம் வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் சிறு சிறு குற்ற சம்பவங்கள் கூட நடைபெறாமல் தடுக்கவும் காவலர்கள் சாதாரண உடையில் மக்களோடு மக்களாக கலந்து கண்காணிப்பு பணியில் இந்த ஆண்டு ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    கலெக்டர் பா,முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்பி, மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நல மேம்பாட்டு பிரிவு அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், நகராட்சி ஆணையாளர் ந.தட்சிணாமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனி, கோட்டப்பொறி யாளர் ராஜ்குமார், உதவி கோட்ட ப்பொறியாளர் ரகுராமன், அண்ணா மலையார் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, கோட்டாட்சியர் மந்தாகினி, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, வட்டாட்சியர் தியாகராஜன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ், நகர மன்ற துணைத் தலைவர் சு.ராஜாங்கம், டாக்டர் சேஷாத்ரி, மெய்யூர் சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா.
    • சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

    விழாவின் 3-ம் நாளான நேற்று காலை 10 மணி அளவில் விநாயகர் மற்றும் அம்பாளுடன் சந்திரசேகரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் அங்கிருந்து வந்து ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் தயார் நிலையில் இருந்த மூஷிக வாகனத்தில் விநாயகரும், பூத வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு சாமிக்கு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அதன் பின்னர் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்கள் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    மேலும் கோவிலில் நேற்று காலையில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 1,008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாக சாலை பூஜையும், தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.

    மேலும் ஆண்டு தோறும் தீபத் திருவிழாவின் 3-ம் நாள் விழாவின் போது பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிரார்த்தனை உண்டியல் வைக்கப்படும். அதன்படி 3-ம் நாள் விழாவான நேற்று கோவிலில் பிரார்த்தனை உண்டியல் கோவில் கொடிமரம் அருகில் வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அலுவலர்கள், நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு உண்டியலில் காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து பக்தர்களும் உண்டியலில் காணிக்கை செலுத்தினர். விழாவையொட்டி கோவில் கலையரங்கத்தில் பரத நாட்டியம், பக்தி சொற்பொழிவு நடைபெற்றது.

    இரவு 10 மணி அளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தீபத்திருவிழாவை யொட்டியும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு
    • 2 ஆயிரத்து 700 பஸ்கள் இயக்கப்பட உள்ளன

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் பேசியதாவது:-

    கார்த்திகை தீப திருவிழாவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கார்த்திகை தீப தரிசனம் காண 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற விழாக்களில் மக்கள் கூட்டத்தை சமாளிப்பது என்பது சவாலான ஒன்று. பக்தர்களின் வசதிக்காக 2 ஆயிரத்து 700 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கோவில் மற்றும் கிரிவலப்பாதை பகுதிகளுக்கு செல்ல 120 பள்ளி மற்றும் தனியார் பஸ்கள் இலவசமாக இயக்கப்படும்.

    ஆட்டோக்களில் செல்ல ஒரு நபருக்கு குறைந்த பட்சம் ரூ.30 முதல் அதிகபட்சமாக ரூ50 என மாவட்ட நிர்வாகத்தால் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஒரு ஆட்டோவில் 3 நபர்களுக்கு மேல் பயணம் செய்ய கூடாது. பக்தர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் பெற்றாலோ அல்லது 3 நபர்களுக்கு மேல் ஆட்டோவில் ஏற்றினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி யின்றி இயக்கப்படும் வெளி மாவட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும். அதிவேகமாகவும், பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் இயக்கப்படும் ஆட்டோக்கள் கண்காணிப்பு அலுவல ர்களால் கண்டறிந்து பறிமுதல் செய்யப்படும். சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றக் கூடாது இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கலெக்டர் பா.முருகேஷ், விழுப்புரம் சரக போக்குவரத்துத் துறை துணை ஆணையர் ரஜினிகாந்த், துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிவக்குமார், வெங்கடேசன், கண்காணி ப்பாளர்கள் சுப்பிரமணி, சுமதி, அமைப்புசாரா தொமுச மாவட்ட செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம், ஆட்டோ டிரைவர்கள் சங்க பிரதிநிதிகள், தனியார் பஸ் மற்றும் வேன் டிரைவர்கள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தீபத்திருவிழாவை முன்னிட்டு நடவடிக்கை
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை பெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 3 நாட்கள் திருவண்ணாமலை நகரத்திற்கு அருகாமையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மூடி வைக்கப்பட உள்ளது.

    அதன்படி காமராஜர் சிலை அருகில் உள்ள மதுபான கடை, வேங்கிக் கால் புறவழிச்சாலை உள்ள மதுபானக்கடை, மணலூர் பேட்டை சாலையில் உள்ள மதுபான கடைகள் மற்றும் திருவண்ணாமலை நகரில் தனியார் ஓட்டல்களில் இயங்கி வரும் மதுபான கூடங்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக் கான அங்காடி ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    • செங்கம் அரசு மருத்துவமனையில் அவலம்
    • டாக்டர்களை நியமிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    புதுப்பாளையம்:

    செங்கம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மருத்துவ தேவைகளுக்காக செங்கம் தலைமை அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

    குறிப்பாக நாய்க்கடி, பாம்பு கடி, உள்பட அவசர சிகிச்சை பிரிவு வரை பொதுமக்கள் மருத்துவ மனைக்கு வருகின்றனர்.

    ஆனால் செங்கம் தலைமை அரசு மருத்துவ மனையில் பல்வேறு சமயங்களில் மருத்துவர் பற்றாக்குறையால் மருத்துவர்கள் வரும் வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

    மேலும் செங்கம் சுற்று வட்ட பகுதிகளில் நடைபெறும் விபத்துகளில் உயிர் சேதம் ஏற்பட்டால் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யாமல் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவ மனையில் பரிந்துரை செய்யப்படுகிறது.

    குறிப்பாக கடந்த ஒரு வருடமாகவே செங்கம் பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் உயரிழந்த வர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தும் பிரேத பரிசோதனை செய்யாமல் திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதனால் உயிரிழந்த வர்களின் உறவினர்கள் உட்பட காவல்துறையினர் என பலதரப்பட்ட மக்கள் இதனால் பாதிக்கப்ப டுகின்றனர்.

    செங்கத்திலிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து உடலை மீண்டும் கொண்டு வருவதற்கு 2 நாள் வரை காத்திருக்க வேண்டிய சூழலும் நிலவுகிறது.

    எனவே கூடுதல் மருத்துவர்களை நியமித்து செங்கம் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் செயல்படுத்திட வேண்டும் எனவும் பிரேத பரிசோதனைகளை செங்கம் அரசு தலைமை மருத்துவ மனையில் உடனுக்குடன் செய்து மக்களை சிரமத்திற்கு ஆளாக்காமல் இருக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வருகிற 22-ந் தேதி கடைசி நாள்
    • வேளாண்மை அதிகாரி தகவல்

    திருவண்ணாமலை:

    சம்பா நெற்பயிர் காப்பீட்டுக் கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்ற னர்.

    தமிழ்நாடு அரசால் எடுக்கப் பட்ட தொடர் முயற்சியால் சம்பா நெற்பயிர் காப்பீட்டுக் கான கடைசி தேதியை வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    எனவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொது சேவை மையங்கள் செயல்படுவதால் இதுவரை சம்பா பயிர் காப்பீடு செய்யாத திருவண்ணாமலை மாவட் டத்தை சேர்ந்த விவசாயிகள் வருகிற 22-ந் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையலாம் என திருவண் ணாமலைவேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

    நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவிற்குள் ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×