search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • பரணி தீபத்துக்கும், மகா தீபத்துக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
    • முறைகேடுகள் தடுப்பதற்காக புதிய முறையில் அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபத்துக்கும், மகா தீபத்துக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 24-ந் தேதி கோவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    அதேபோல் இந்த முறை கட்டளைதாரர், உபயதாரர்களுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டில் சிப் பொருத்தி வழங்கப்பட உள்ளது.

    முறைகேடுகள் தடுப்பதற்காக புதிய முறையில் அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
    • 10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.

    திருவண்ணாமலையில் வருகிற 26-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 14-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம் விநாயகர் உற்சவம் நடந்தது.

    இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 5.40 மணி அளவில் துலா லக்கினத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.

     

    முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கொடிமரத்தின் அருகே அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.

    நவம்பர் 22-ந்தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 23-ந்தேதி மகா தேரோட்டமும் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீபம் நவம்பர் 26-ந்தேதி ஏற்றப்படுகிறது.

    26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருள்வார். அப்போது 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

      26-ந்தேதி முதல் 11 நாட்களுக்கு மலை உச்சியில் அண்ணாமலையார் ஜோதிப்பிழம்பாக காட்சி தருவார். கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன.

    இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் போலீஸ் கட்டுப்பாடு இல்லாமல் சாமி தரிசனம் செய்தனர். 

    • 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும்
    • அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் தச்சூர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பிரசாத் தலைமையில் பா.ஜ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும், 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாபாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அருணகிரி, அசோக் குமார், சேகர், ராமலிங்கம், பழனி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் வினோத்குமார், ஆதி திராவிடர் துறை மாநில துணைத்தலைவர் அன்புதாஸ், மாவட்ட தலைவர் முருகன், வட்டார தலைவர்கள் பந்தாமணி, இளங்கோவன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் திரளாக பங்கேற்றனர்

    • 8 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது
    • பழமை தன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது

    திருவண்ணாமலை:

    கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடத்தில் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவிடம் சீரமைக்கப்படும் என தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    வைக்கம் பகுதியில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு சென்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

    8 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் பெரியார் நினைவிடம் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என 2 தளங்களும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதில் நூலகம், அருங்காட்சியகம், சிறுவர் பூங்கா, திறந்தவெளி அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

    நினைவிடத்தில் உள்ள சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில் ஆகியவை அதன் பழமை தன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

    ஆய்வின் போது பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன், சிறப்பு அலுவலர் விஸ்வநாத், முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கோவை மண்டல தலைமை பொறியாளர் காசிலிங்கம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • பரிசுகள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் பங்கேற்றனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா வரவேற்றார்.

    மாணவர்கள் பங்கேற்ற குழந்தைகள் தின பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலும் பள்ளி நூலகத்திற்கு பல்துறை சார்ந்த 30 புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சீனுவாசன் நன்றி கூறினார்.

    • திருவண்ணாமலை கோவிலில் தற்போது முழு நேர அன்னதானம் நடைபெற்று வருகிறது.
    • திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதிகளில் கட்டணத்தை உயர்த்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆலோசனை கூட்டம் இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் சேகர்பாபு இன்று திருவண்ணாமலை வந்தார். அவர் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அமைச்சர் எ.வ. வேலு, கலெக்டர் முருகேஷ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம், மகாதீபம் தரிசன ஏற்பாடுகள் பாதுகாப்பு குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தார்கள்.

    இந்த ஆண்டு கூடுதலாக 25 சதவீதம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக செய்யப்பட்டுள்ளன.

    பரணி தீபம் மற்றும் கார்த்திகை தீபம் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை கோவிலில் தற்போது முழு நேர அன்னதானம் நடைபெற்று வருகிறது. இங்கு காலை மற்றும் மாலை நேரத்தில் டிபன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் சாத்தியக்கூறுகள் இருந்தால் கண்டிப்பாக அன்னதானம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும்.

    கார்த்திகை தீபத்தின் போது வி.ஐ.பி. பாஸ் தரிசனம் முறை அமலில் இல்லை. கட்டளைதாரர் உபயதாரர் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி உள்ளது. கடந்த ஆண்டு பரணி தீபத்தில் 4000 பக்தர்களும் மகா தீபத்தின் போது 7500 பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு கூடுதலாக அனுமதிப்பது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

    திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதிகளில் கட்டணத்தை உயர்த்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியுள்ளது. சூரசம்காரம் நடைபெற உள்ளது. கோவிலில் விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.500-ல் இருந்து 2000 ஆகவும். அபிஷேக கட்டணம் ரூ.500-ல் இருந்து 2000 ஆகவும் கடந்த 2018 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்டது.

    ரூ.100 தரிசன கட்டணம் எப்போதும் போல் அமலில் உள்ளது. வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர்கள் சிறப்பு தரிசன கட்டணத்தில் ஏமாற்றப்படுகிறார்கள்.

    இதனை தடுக்க ரூ.800 சிறப்பு தரிசன கட்டணம் அமலில் உள்ளது. இது தற்போது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது. பக்தர்களிடம் ஆட்சேபனை குறித்து முன்னறிவிப்பு விளம்பரம் செய்யப்பட்டது.

    அனைத்து முன்மொழிவுகளும் பெற்ற பிறகு சிறப்பு தரிசன கட்டணத்தில் ரூ.200 கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள்.

    வேறு எதையும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இந்த ஆண்டு புதிதாக திருச்செந்தூர் கோவிலில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக விஷம பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனை பக்தர்கள் நம்ப மாட்டார்கள்.

    இந்த ஆண்டு அறுபடை முருகன் கோவில் உட்பட அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விழா முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் திமுக ஆட்சியின் மீது விஷம பிரசாரத்தை செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அருணாலேஸ்வரர் கோவில் மாடவீதியின் ஒரு பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
    • சிமண்டு சாலையில் தேர் வருவதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் திருமலை திருப்பதியில் உள்ளதைப்போல் கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    நெடுஞ்சாலைத்துறை சார்பில் அருணாலேஸ்வரர் கோவில் மாடவீதியின் ஒரு பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. பணி நிறைவு பெற்ற நிலையில் புதிய சாலையில் இன்று காலை 5.30 மணிக்கு முருகர் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

    ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சிமண்டு சாலையில் தேர் வருவதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    • கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நேற்று பிடாரி அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காமதேனு வாகனத்தில் மாட வீதியில் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து நேற்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அங்காரத்தில் பிடாரி அம்மன் எழுந்தருளி கோவிலின் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் முன்பு தயார் நிலையில் இருந்த சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அம்மன் மாட வீதி உலா நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    இன்று (வியாழக்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெற உள்ளது.

    தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 4.45 மணியில் இருந்து 6.12 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று காலையில் மற்றும் இரவில் விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2-ம் நாள் விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி விழாவும் நடைபெற உள்ளது.

    இதற்கிடையில் 23-ந் தேதி (7-ம் நாள் விழா) பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது. கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 26-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அன்று இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலாவும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • மின் வாரிய செயற்பொறியாளர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த ராணிப் பேட்டை துணை மின்நிலையத்தில் அத்தி யாவசிய மின் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி. மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல்புதுப் பேட்டை, பிஞ்சி, அல்லி குளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை ராணிப்பேட்டை மின்வாரிய செயற் பொறியாளர் ஆர்.குமரே சன் தெரிவித்துள்ளார்.

    ஆரணி தச்சூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது.

    இத னால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தச்சூர், அரையாளம், மருசூர், விண்ணமங்கலம், மதுராபெரும் பட்டூர், நடுப்பட்டு, கோனை யூர், தெள்ளூர், ராந்தம், பெரியகொழப்பலூர், நாரா யணமங்கலம், நமத்தோடு, கங்காபுரம் வில்வாரநல்லூர், அப்பேடு, ஆவணியாபுரம், சாத்தமங்கலம், மரக்கோ ணம், கின்னனூர், இந்திரவ னம், திருமணி, மேலானூர், ஆகாரம், புதுப்பட்டு, நாவல் பாக்கம், அன்மருதை, மேல் சீசமங்கலம், கொரு க்காத்தூர், முனுகப்பட்டு, கீழானூர், நரி யம்பாடி, எஸ்.காட்டேரி, களம்பூர், கஸ்தம்பாடி, அணி யாலை, சீனிவாசபுரம், முக்கு றும்பை, இலுப்பகுணம், கன் னிகாபுரம், அய்யம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதி களில் மின்சாரம் நிறுத்தப் படும்.மேற்கண்ட தகவலை மின் வாரிய செயற்பொ றியாளர் ஆர்.ரவி தெரிவித்துள்ளார்.

    • ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற உள்ளதால் நடவடிக்கை
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவு

    போளூர்:

    போளூரில் வருகிற 19-ந் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பேரணி நடைபெறும் தெருக்களை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீரென்று ஆய்வு செய்தார்.

    மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது
    • கொடியேற்று விழா நடைபெற்றது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு திருவண்ணா மலையில்உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மண்டல அலுவலக வளாகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது.

    கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவுவங்கியின் இணைப்பதிவாளர் கா.ஜெயம் கூட்டுறவு கொடியை ஏற்றி கூட்டுறவு வார விழாவை தொடங்கி வைத்தார்.

    இதில் துணை பதிவாளர்கள் ராஜசேகரன், சித்ரா, செயலாட்சியர்கள் மீனாட்சிசுந்தரம், சுரேஷ்குமார், தீபன் சக்கரவர்த்தி, சார்பதிவாளர் விஜயகுமாரி, டான்பெட்மண்டல மேலாளர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு இன்று உறுப்பினர் சேர்க்கை மற்றும் கடன் மேளா நடைபெற உள்ளது.

    நாளை செங்கம்அடுத்த அந்தனூர் கிராமம் மற்றும் செய்யாறு அடுத்த கடம்பை ஆகிய கிராமங்களில் இலவச கால்நடைசிகிச்சை முகாம்கள் நடைபெறும். 17-ந் தேதி பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலுதலைமையில் திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு வார விழா நடைபெறுகிறது.

    18-ந் தேதி திருவண்ணா மலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு வார விழா கருத்த ரங்கம்ந டைபெறுகிறது. 19-ந் தேதி நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்நடைபெற உள்ளது.

    20-ந் தேதி திருவண்ணா மலை வேளாண் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கம்மற்றும் செய்யாறு கிளை அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடைபெறும் என கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன் தெரிவித்தார்.

    • பக்தர்கள் கடும் அதிர்ச்சி
    • உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 17-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்க உள்ளது. தினமும் இரவு, பகல் என 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதில் 26-ந் தேதி காலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

    கார்த்திகை தீப திருவிழாவிற்காக தமிழகம் முழுவதிலும் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணா மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் திருவண்ணாமலை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி தீப தரிசனம் காண்பார்கள். இதனை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதி களில் 24, 25, 26-ந் தேதி களில் மட்டும் கட்டணம் பல மடங்கு உயர்த்த ப்பட்டுள்ளது.

    சாதாரண நாட்களில் ஒரு அறைக்கு ரூ.1000 முதல் ரூ.3 ஆயிரம் அறைக்கு தகுந்தார் போல் கட்டண வசூல் செய்யப்படுகிறது. இதில் தீபத்திருவிழா முக்கிய விசேஷ நாட்களான 24, 25, 26 ஆகிய 3 நாட்களில் 10 முதல் 15 மடங்கு தங்கும் விடுதிகளுக்கு ஏற்றார் போல் விலையை உயர்த்தி கட்டணம் வசூலிக்கின்றனர்.

    பக்தர்களும் வேறு வழியில்லாமல், கேட்கும் கட்டணத்தையும் கொடுத்து விட்டு தங்கும் நிலை உள்ளது. உதாரணமாக ரூ.1500-க்கு வழங்கும் ஒரு ஏ.சி. அறைக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விடுதிகளுக்கு ஏற்றார் போல் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    ×