என் மலர்
திருவண்ணாமலை
- ரூ.1 கோடிக்கு மேல் விற்பனையானது
- அதிகாலை முதலே விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தேப்பந்தல் மாட்டுச்சந்தை மிகவும் பெயர் பெற்ற சந்தையாக விளங்கி வருகின்றது.
இந்த மாட்டு சந்தையில் ஜெர்சி களர் நாட்டு மாடு உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வருகின்றன. வேலூர் கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களி இருந்தும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலத்திலிருந்தும் மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டு விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கும் விற்பனை செய்யவதற்கும் இந்த தேப்பனந்தல் மாட்டு சந்தையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
தற்போது வரையில் இந்த சந்தையில் கைகளில் துண்டு போட்டு மாட்டு விவசாயிகள் விலை பேசும் நிகழ்வு நடைபெற்று வருகின்றன.
நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற மாட்டு சந்தையில் அதிகாலை முதலே விவசாயிகள் ஆர்வத்துடன் மாடுகள் வாங்கவும் விற்பனை செய்யவும் குவிய தொடங்கினர்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சுமார் ரூ.1 கோடி மேல் மாட்டுகள் விற்பனை நடைபெற்றதாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது.
- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
- தொடக்க விழா நடந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கம்பன் கலைக்கல்லூரியில் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான டிஜிட்டல் கையெழுத்து இயக்க தொடக்க விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது:-
இந்த கல்லூரியில் படித்த பலர் அரசுத்துறை அதிகாரிகளாகவும், கல்லூரிகளின் தலைவராகவும், பேராசிரியர்களாகவும் உள்ளனர்.
இங்கு படித்தவர்கள் என்னை வெளி இடங்களில் பார்க்கும் பொழுது நாங்கள் உங்கள் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் எங்களை மாணவிகளாக பார்க்காமல் மகள்களாக பார்த்து பாதுகாத்து படிக்கவைத்தீர்கள் என்று கூறுவதை கேட்கும் போது எனக்கு மனநிறைவை தந்தது மட்டுமின்றி பெண் பிள்ளைகள் இல்லையே என்ற கவலையையும் போக்கியது. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்ற வள்ளுவரின் பொன்மொழிக்கு ஏற்ப நீட் தேர்வுக்கு எதிராக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்திருக்கும் இந்த முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு இலக்கை அடைய வேண்டும் என்றால் ஆற்றல், அறிவு மற்றும் மக்கள் செல்வாக்கு தேவை. இவை அனைத்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உள்ளது.
நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை கையில் எடுத்திருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முயற்சிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்தியாவிலேயே விழிப்புணர்வு அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டின் அடையாளம். அதனால் தான் நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஒரே வயிற்றில் பிறந்த குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை கொண்டுவந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
பல்வேறு வரலாறுகளைக் கொண்ட திராவிட இயக்கம் தற்பொழுது நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி தலைமையில் போராடி வருகிறது.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதல் - அமைச்சர் கல்வித்துறை, மருத்துவத்துறை, கட்டுமானத் துறை ஆகிய 3 துறைகளையும் தனது கண்களாக பாவித்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இவ்வாறு அவர் ேபசினார்.
இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், பொறியாளர் அணி மாநில செயலாளர் கு.கருணாநிதி, மருத்துவரணி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் பிரவீன் ஸ்ரீதரன், மாணவரணி அமைப்பாளர் ரவி, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கட்டுமான பணிகளால் தரிசனம் பாதிக்கப்படாது என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
- அறநிலையத் துறைக்காக பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் எதிரே அடுக்குமாடி வணிக வளாகம் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறநிலையத் துறைக்காக பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரவு பிறப்பித்த நிமிடத்திலிருந்து தடை உத்தரவு அமலுக்கு வருவதாகவும், எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ராஜ கோபுரத்திற்கு எதிரில், அறநிலையத் துறை சார்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்படுவது தொடர்பாக சிறப்பு அமர்வில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
ராஜகோபுரம் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், கோபுர தரிசனம் தடுக்கப்படும் எனவும் நீதிபதிகளிடம் முறையிடப்பட்டது. ஆனால், கட்டுமான பணிகளால் தரிசனம் பாதிக்கப்படாது என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
- அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
- தீபாவளி சீட்டு நடத்தி மோசடி
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் காஞ்சிபுரம் சாலையில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதன் கிளைகள் ஆரணி மற்றும் வந்தவாசியில் செயல்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தில் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர்.
இதில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள தருவதாக கூறி இருந்தனர். இதனால் வந்தவாசி, ஆரணி, செய்யாறு பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இந்த நிதி நிறுவனத்தில் சீட்டு கட்டினர். சீட்டு முடிந்ததால் பொருட்களை வாங்கு வதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் நிதி நிறுவன உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டனர்.
இதற்கு உரிமையாளர் பொருட்களை தருவதாக கூறி பணம் கட்டியவர்களை அலைக்கழித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் செய்யாறில் உள்ள தலைமை நிதி நிறுவனத்திற்கு ஆரணி, வந்தவாசி, செய்யாறை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வந்தனர். அப்போது அந்த நிதி நிறுவனம் பூட்ட பட்டு இருந்தது.
அள்ளி சென்றனர்
இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அந்த நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பொதுமக்கள் சிலர் பீரோ உள்ளிட்ட பொருட்களை பைக் மற்றும் வாகனங்களில் எடுத்து சென்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
தீபாவளி முன்னிட்டு, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி கீழ்பென்னாத்தூரில் (வ)ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடந்தது.
ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் சி.கே.அன்பு, பேரூராட்சி தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்திருந்த பட்டாசு, இனிப்பு உள்ளிட்ட தீபாவளி பரிசினை கீழ்பென்னாத்தூர் ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஒன்றிய நிர்வாகிகள் சிவக்குமார், குப்புசாமி,தேவேந்திரன், மணிகண்டன், லோகநாதன், பேரூராட்சிதுணை தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி, திமுக நகர நிர்வாகிகள் பழனி, இளங்கோ, ராஜேஷ், ராஜாராம், வினோத், சின்னா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதேபோல், கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றியம் இராசன்தாங்கலில் கீழ்பென்னாத்தூர் தெற்குஒன்றிய செயலாளர் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு, திமுக தெற்கு-ஒன்றிய நிர்வாகிகளுக்கு பட்டாசு, இனிப்பு வகைகள் கொண்ட தீபாவளி பரிசினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
- மாற்றுபாதை சேரும், சகதியுமாக இருப்பதாக புகார்
- ேபாக்குவரத்து பாதிப்பு
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பஸ் நிலையம் அருகே நெடுஞ்சாலை துறை சார்பில் சிறு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிறு பாலம் அருகே மாற்று ப்பாதை அமைக்கப்பட்டு பொதுமக்கள் அந்த வழியாக சென்று வந்தனர்.
தற்போது பெய்த மழையால் மாற்றுப்பாதை முழுவதும் சேரும் சகதியமாக மாறி உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் செல்லும்போது சேற்றில் சிக்கி கீழே விழுகின்றனர். மேலும் பைக்கில் செல்லும்போது வழுக்கி கீழே விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சரியான முறையில் மாற்றுப்பாதை அமைக்காததால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் இன்று காலை புதிய பஸ் நிலையம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் வேலைக்கு செல்வோர் மிகவும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
- பண்பாட்டுத்துறை சார்பில் நடக்கிறது
- கலெக்டர் தகவல்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் போட்டிகள் நடைபெறும் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட, மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மாவட்ட அரசு இசைப்ப ள்ளியில் நடைபெற உள்ளது. குரலிசை, கருவி இசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
17 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த போட்டிகளில் கலந்துகொள்ளலாம். மாவட்ட அளவில் முதலிடம் பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
கலைப் போட்டிகள் குறித்து கூடுதல் விவரங்களை பெற 044-27269148, 86673 99314 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
- பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை நகர தி.மு.க. சார்பில் நகராட்சி 26-வது வார்டில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன் தலைமை தாங்கினார். நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், துணைத் தலைவர் சு.ராஜாங்கம், நகர நிர்வாகிகள் ந.சீனுவாசன், குட்டி புகழேந்தி, இல.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரமன்ற உறுப்பினர் க.பிரகாஷ் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டின் நவீன சிற்பியான கலைஞரின் நூற்றாண்டு விழாவை திருவண்ணாமலை நகர தி.மு.க. சார்பில் சிறப்பான முறையில் கொண்டா டப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை 5 முறை ஆட்சி செய்த கருணாநிதி சிறப்பான ஆட்சியை தந்தார்.
அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை காட்சி பொருளாக மாற்ற நினைத்த தொல்லியல் துறையிடம் இருந்து மீட்டுத் தந்தவர் கருணாநிதி. அதன் பலனாகத்தான் உலகம் முழுவதிலும் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் ஆன்மிக பக்தர்கள் வழிபடும் அருணா சலேஸ்வரர் கோவிலில் தங்குதடையின்றி பூஜைகள், திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் தி.மு.க.வின் கோட்டை. மாவட்ட மக்கள் கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். நன்றி உணர்வு மிக்கவர்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
திராவிட மாடல் அரசின் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்க அயராத உழைப்பினை செலுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மு.பெ.கிரி எம்.எல்.ஏ, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன், மாநில தொ.மு.ச. செயலாளர் சவுந்தரராஜன், மாவட்ட அமைப்பாளர்கள் டிவிஎம் நேரு, விஜி என்கிற விஜயராஜ், டாக்டர் பிரவீன் ஸ்ரீதரன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் எம்.ஆர்.கலைமணி, டி.எம்.கலையரசன், திவாகர், மாவட்ட கவுன்சிலர் இல.சரவணன், மண்டி ஏழுமலை, நகரமன்ற உறுப்பினர் கோபி சங்கர், லாயர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குரு டிராவல்ஸ் கண்ணன் நன்றி கூறினார்.
- வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை
- போலீசில் புகார்
செய்யாறு:
வெம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய இளம்பெண். இவர் நேற்று வெளியே சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அடைந்த பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி உள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் மோரணம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
- செங்கம் வட்டத்தில் தடுப்பூசி முகாம்
- மாடுகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை
புதுப்பாளையம்:
செங்கம் சுற்றுவட்ட பகுதிகளில் பசு மாடுகள் அதிக அளவில் கிராமப்புறங்களில் விவசாயிகள் வளர்த்து பராமரித்தும் துணை தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் தொற்று பரவி மாடுகள் உயிரிழப்பதால் மாடுகள் வளர்ப்போர் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் செங்கம் வட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தற்போது ஒவ்வொரு கிராமங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்கரிய மங்கலம் அண்டப்பேட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் கோமாரிநோய் தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் செங்கம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் சிவரஞ்சனி தலைமையில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- இரவு வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தவரை கடித்தது
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த குளமந்தை பகுதியை சேர்ந்தவர் அமரேசன். விவசாயி. இவரது மகள் நிவேதா. (வயது 17). இவர் கடந்த 3-ந் தேதி இரவு வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அதிகாலையில் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. தூங்கிக் கொண்டி ருந்த நிவேதாவை பாம்பு கடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் எழுந்து பார்த்தனர்.
அப்போது நிவேதா மயங்கி கீழே விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவ மனையில் அனுமதித்தினர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நிவேதா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அனக்காவூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நிவேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 23 ஆடுகள் சாவு
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் மதுரா சொரக்கா பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மார்க்கண்டேயன் விவசாயி தச்சூர் அருகே உள்ள வரதகண்டம் நிலத்தில் சுமார் 23 ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் விவசாயி மார்க்கண்டேயன் அருகில் இருந்த விவசாய நிலத்தில் உள்ள பம்பு செட் அறையின் வெளியே மழைக்காக நின்று கொண்டு ஆடுகளை பாதுகாத்து கொண்டி ருந்தார்.
இதனையடுத்து திடீரென இடி தாக்கியதில் சுமார் 23 ஆடுகளுடன் விவசாயி மார்க்கண்டேயன் சம்பவ இடத்திலே பரிதா பமாக இறந்தனர்.
இச்சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் விவசாயி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் அறிந்த சம்பவடத்திற்கு வந்த ஆரணி தாசில்தார் மஞ்சுளா இறந்த விவசாயி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.