search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • வாலிபர் கைது
    • முள் மரங்களை வெட்டியதை தட்டிக் கேட்டார்

    செய்யாறு:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேட்டையை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 50). இவர் திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியில் வன காப்பாளராக உள்ளார்.

    கடந்த 24-ந் தேதி மாலை சுமங்கலி கிராமம் பகுதியில் இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அரசுக்கு சொந்தமான இடத்தில் கந்தன் ( 24 ) என்பவர் முள் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட சின்னப்பன் ஏன் மரங்களை வெட்டுகிறாய் என்று கேட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த கந்தன், சின்னப்பனை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து மோரணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கந்தனை நேற்று கைது செய்தனர்.

    • அரோகரா கோஷம் விண்ணதிர நடந்தது
    • 8 திசைகளிலும் அமைந்துள்ள அஷ்டலிங்கங்களை பக்தர்கள் தரிசனம்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகும். அடி முடி காணாத ஜோதிப் பிழம்பாக இறைவன் எழுந்தருளிய திருத்தலம் என்பதால், இங்கு அமைந்துள்ள மலையை இறைவன் திருவடிவாக வணங்கப்படுகிறது.

    மேலும், தீபமலையை சுற்றிலும் 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில், இந்திரன் முதலானோர் வணங்கி வழிபட்ட அஷ்டலிங்க சன்னதிகள் அமைந்துள்ளன.

    8 திசைகளிலும் அமைந்துள்ள அஷ்டலிங்கங்களை பக்தர்கள் தரிசனம் செய்தபடி கிரிவலம் செல்கின்றனர்.

    மேலும், பிற்காலத்தில் உருவான சூரியலிங்க சன்னதி, சந்திரலிங்க சன்னதிகளும் வழிபாட்டுக்கு உரியதாகும்.

    இந்நிலையில், கிரிவ லப்பாதையில் அமைந் துள்ள அஷ்டலிங்க சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை கடந்த ஆண்டு அறிவித்தது.

    அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருப்பணிகள் தொடங்கி, கடந்த ஒரு ஆண்டாக நடந்தது.

    அஷ்டலிங்க சன்னதிகளில் நேற்று காலை கணபதிபூஜையுடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது. பின்னர், நேற்று மாலை முதல் கால பூஜையும், தீபாராதனையும் நடந்தது.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் 2-ம் கால பூஜையும், 8 மணி அளவில் மூலவர் அஷ்டலிங்கங்கள் மற்றும் சூரிய லிங்கம், சந்திரலிங்கம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அஷ்டலிங்க சன்னதிகளான இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம, நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபரே லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் சன்னதிகளுக்கும் காலை 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் அதிவிமரிசையாக நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணதிர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது.

    மகா கும்பாபிஷே ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தன.

    • தாயார் கண்டித்ததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    மேல் செங்கம் அடுத்த மேல் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முத்தம்மா. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 13). அதே பகுதியில் உள்ள அரசுபெண்கள் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஐஸ்வர்யா வீட்டில் உள்ள வேலைகள் செய்யாமல் இருந்தார். தாயார் முத்தம்மா ஐஸ்வர்யாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஐஸ்வர்யா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனைக் கண்ட தாயார் முத்தம்மா அதிர்ச்சி அடைந்து மேல் செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஐஸ்வர்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள நலத்திட்டங்கள் குறித்த கையேடு வெளியீடு
    • குறைதீர்வு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் பா.முருகேஷ் பேசியதாவது:-

    விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு நிதி பயன், பயிர் காப்பீட்டு பயன்கள் பெற்றுத்தரப்படும். அனைத்து பால் கொள்முதல் சங்கங்களிலும் மின்னணு எடை மேடை மூலம் பால் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய நெல் ரகங்களை வழங்க வேண்டும்.

    புதுப்பாளையம் அடுத்த ஜி என் பாளையம் கிராமத்தில் மயான பாதை மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறையின் சார்பில் ஏரி, குளம் மற்றும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அரசு கால்நடை மருத்துவ மனைகளில் போதிய அளவு மருந்துகள் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

    அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், உர விற்பனை நிலையங்களில் யூரியா மற்றும் உரங்கள், வேளாண் கிடங்குகளில் போதிய அளவிற்கு விதைகள் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

    விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட குறைதீர்வு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா மாறுதல் குறித்த மனுக்களுக்கு விரைந்து தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள நலத்திட்டங்கள் குறித்த கையேட்டினை கலெக்டர் வெளியிட்டார்.

    கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் அரக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சோமசுந்தரம், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் செந்தில்குமார், முன்னோடி வங்கி மேலாளர் கவுரி, முன்னாள் எம்.எல்.ஏ எதிரொலிமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்
    • பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிக்கல்வி த்துறை சார்பில், கீழ்பென்னா த்தூர் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா கீழ்பெ ன்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 18-ம் தேதி முதல் 26 -ம் தேதி வரை நடந்தது. 6-முதல் 12 -ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான ஓவியம், இசை, நடனம், தமிழ் பேச்சு போட்டி, ஆங்கில பேச்சு போட்டி, பரதம், குழு நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதன் நிறை விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைகல்வி) காளிதாஸ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முதல்வர் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ். ஆறுமுகம், ஒன்றிய குழுத்தலைவர் அய்யாக்கண்ணு, பேரூராட்சி தலைவர் சரவணன், வேட்டவலம்பேரூராட்சி துணைத்தலைவர் ரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கீழ்பென்னாத்தூர் வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி அனைவரும் வரவேற்றார்.

    விழாவில் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்தும் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கியும் சிறப்புரையாற்றினார்.

    விழாவில், திருவண்ணாமலை அண்ணாதுரை எம்.பி, கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள்மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவாசீர்வாதம், கொளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி கருணாகரன், அரசு பெண்க ள்மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை உமாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை ஜமீன் அகரம் பள்ளி தலைமை ஆசிரியர் சி.அ.முருகன் தொகுத்து வழங்கினார். வட்டார வளமைய மேற்பார்வை யாளர் செல்வம் நன்றி கூறினார்.

    • இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்பட உள்ளது
    • கலெக்டர் தகவல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 206 அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதில் 192 அரசு டாஸ்மாக் கடைகளில் பார்கள் அமைக்க இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்பட உள்ளது.

    இதில் விருப்பம் உள்ளவர்கள் நாளை பிற்பகல் 2 மணிவரை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். நாளை மாலை 4.30 மணிக்கு இ- டெண்டரில் கலந்து கொண்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    • தேசிய நெடுஞ்சாலை விபத்தில் 15 பேர் பலி எதிர்ரொலி
    • 5 கிலோ மீட்டரில் சோதனைச் சாவடிகள் உருவாக்கப்படும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியில் திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 15 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் இந்த சாலையில் விபத்துகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு பரிந்துரைகள் வழங்கப்பட உள்ளதாகாக தெரிவித்தனர்.

    இந்த ஆய்வு குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீசார் கூறியதாவது:-

    மொத்தம் 180 கி.மீ., திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 60 கி.மீ., திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்கிறது.

    தற்போதுள்ள சோதனைச் சாவடிகள் இரட்டிப்பாக்கப்பட உள்ளது.

    பெரும்பாலான பயணிகள் புதுச்சேரி மற்றும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஒவ்வொரு 5 கி.மீ.க்கும் ஒரு சோதனைச் சாவடிகள் உருவாக்கப்படும், இரவு நேரங்களில் விபத்தை தடுக்கும் வகையில் கான்கிரீட் மீடியனில் மிளரும் விளக்குகள் அமைக்கப்படும்.

    குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றுக்கு எதிராக கூடுதல் விழிப்புணர்வு பலகைகளை நிறுவப்படும், நவீன தொழில்நுட்பம் மூலம் மூலம் குறுகிய வளைவுகளை குறைத்தல் மற்றும் சாலை விரிவாக்கத்திற்கு இடம் வழங்குதல் உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட உள்ளதாக கூறினர்.

    • நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • 51 பயனாளிகள் பயணடைந்தனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே உள்ள திருப்பனங்காடு கிராமத்தில் பில்லாங்கல், வெம்பாக்கம், திருப்பனங்காடு, சேலரி ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பேசினார். சப் -கலெக்டர் அனாமிகா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் பா. முருகேஷ் கலந்துகொண்டு 51 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் ஜே.சி.கே.சீனிவாசன், சங்கர், ஞானவேல், தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளை மறுநாள் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
    • 2 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர்.

    அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 4.01 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைகிறது.

    இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நாளை மறுநாள் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் 2 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • பைக் மீது எதிரே வந்த ஆட்டோ மோதியது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    திருவண்ணாமலை:

    சேத்துப்பட்டு ஏனாமங்கலம் அடுத்த கிராமத்தில் வசித்தவர் ரமேஷ் மகன் பாரதி(20). இவர், கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்து சேத்துப்பட்டுக்கு 2 தங்கையை வாகனத்தில் அழைத்துக்கொண்டு பைக்கில் சென்றார். கங்கைசூடாமணி கிராமத்தில் சென்றபோது, பைக் மீது எதிரே வந்த ஆட்டோ மோதியது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த பாரதி, சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பாரதி உயிரிழந்தார். அவரது தங்கை சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிர்வாகி களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது
    • அ.தி.மு.க. வெற்றி பெற கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பாடுபட வேண்டுகோள்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த பிருதூர் மற்றும் வழூர் கிராமத்தில் வந்தவாசி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி கூட்டம் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு நிர்வாகி களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என பேசினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஏ.கே.எஸ்.அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், டி.கே.பி.மணி, ஒன்றிய செயலாளர் லோகேஸ்வரன், சித்ரா கலையரசு, ராஜேஷ், பிருதூர் செல்வகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாடுகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு அழைத்துச் சென்றபோது துணிகரம்
    • போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு வயலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விநாயகன் (வயது 30). மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

    இதையடுத்து மாணவியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த செய்யாறு போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சோனியா தலைமையிலான போலீசார் தலைமறைவாக உள்ள விநாயகனை தேடி வருகின்றனர்.

    ×