search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • போட்டியில் வெற்றி பெற்ற கன்று குட்டிக்கு பீர் பாட்டில்கள் பரிசு
    • உரிமையாளர்கள் உற்சாகத்தில் ஆரவாரம்

    கலசப்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் முதலாம் ஆண்டு கன்று விடும் திருவிழா நடைபெற்றது.

    இதில் திருவண்ணா மலை, ஆரணி, செங்கம், வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் அதிகமான கன்று குட்டிகள் கலந்து கொண்டன.

    மாடுகளை அதன் உரிமையாளர்கள் வண்ண வண்ண மலர்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர். காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்க ப்பட்டிருந்தன. சாலை நடுவே மண் மற்றும் தேங்காய் நார் கொட்டப்ப ட்டிருந்தது. விழா தொடங்கு வதற்கு முன்னதாக கன்று குட்டிகளுக்கு வீதி காண்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கால்நடை மருத்துவர்கள் கன்றுகுட்டிகளை பரிசோ தனை செய்த பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தனர். இதனை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப் பாய்ந்து ஓடிய கன்றுகுட்டிகளை பார்வை யாளர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.

    விழாவில் மாடு முட்டி காயம் அடைந்தவர்களை, அங்கு முகாமிட்டிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற கன்றுகுட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், கடைசி பரிசு ரூ.2 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. இதில் துள்ளி குதித்து ஓடிய 2 கன்றுக்குட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக, அவைகளுக்கு சிறப்பு பரிசாக 1 பெட்டி பீர் பாட்டில்கள், 2 புல் மது பாட்டில்கள் மற்றும் நாட்டுக்கோழி உள்ளி ட்டவை வழங்கப்பட்டன.

    இதனை பெற்று க்கொண்ட கன்றுக்கு ட்டியின் உரிமையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து கொண்டாடினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சிரிப்ப லையில் மூழ்கடித்தது.

    • கார்த்திகை தீபத்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
    • சாமி வீதி உலா வரும் வாகனங்கள் சீரமைத்து புதியதாக வர்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகின்றது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை பெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றா கும். இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் நிறைவாக 26-ந் தேதி மகா தீப ஏற்றப்படும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது

    விழாவின் 7-ம் நாள் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடை பெறும். அன்று காலையில் தொடங்கி நள்ளிரவு வரை விநா யகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ் வர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தேர்கள் மாட வீதியில் அடுத்தடுத்து பவனி வரும். இந்த நிலையில் கோவிலில் தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    விழா நாட்களில் சாமி வீதி உலா வரும் வாகனங்கள் சீரமைத்து புதியதாக வர்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகின்றது.

    தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் தேர்கள் பழுது நீக்கி சீரமைக் கும்பணி தொடங்கி விறு, விறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்காகதேரடி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு தேர்களின் பாதுகாப்பிற்காக மூடப்பட்டு இருந்த இரும்பு தகடுகள் நேற்று அகற்றப்பட்டன. தொடர்ந்து தேர்களின் சக்கரங்கள், அச்சு போன்ற பாகங்கள் உறுதியாக உள்ளதா என ஆய்வு செய்யப் பட்டது. உறுதி குறைந்து உள்ள பாகங்களை மாற்றவும், சீர மைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    தேர்கள் சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் பொதுப்பணித்துறை (கட்டுமானம்) அதிகாரிகள் தேர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து அதன் உறுதித் தன்மை குறித்து சான்று அளிக்க உள்ளனர்.

    • போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்தார்
    • பணியின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 40 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 7 மக ளிர் போலீஸ் நிலையங்கள், 1 குற்றவியல் போலீஸ் நிலை யம், 3 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள், கலால் 4 போலீஸ் நிலையங்கள் என 55 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    இந்த நிலையில் போலீஸ் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்க ளின் பராமரிப்பு குறித்த மாதாந்திர ஆய்வு திருவண் ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலக வளா கத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

    அப்போது போலீஸ் சூப்பி ரண்டு கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு பராமரிப்பு கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசாருட னான ஆய்வு கூட்டம் நடை பெற்றது. இதில் போலீசார், பணியின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என் பது குறித்து அவர் எடுத்து ரைத்தார். மேலும் போலீசா ரின் குறைகளையும் கேட்ட றிந்தார்.

    தொடர்ந்து கடந்த மாதத் தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு அவர் சான்றி தழ்களை வழங்கி பாராட்டி னார்.

    அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண் டுகள், இன்ஸ்பெக்டர்கள் என போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • மாடுகளை வண்ண மலர்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர்
    • காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா இன்று நடைபெற்றது.

    இதில் திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் அதிகமான காளைகள் கலந்து கொண்டன. மாடுகளை அதன் உரிமையாளர்கள் வண்ண மலர்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர்.

    காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்க ப்பட்டிருந்தன. சாலை நடுவே மண் மற்றும் தேங்காய் நார் கொட்டப்பட்டிருந்தது. விழா தொடங்குவதற்கு முன்னதாக காளைகளுக்கு வீதி காண்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்த பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தனர். இதனை தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப் பாய்ந்து ஓடிய காளைகளை பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.

    விழாவில் மாடு முட்டி காயம் அடைந்தவர்களை, அங்கு முகாமிட்டிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • 441 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்
    • முதல் பரிசாக 5 ஆயிரம் வழங்கப்பட்டது

    வேங்கிக்கால்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் திருவண்ணாமலையில் நடைபெற்றது. 17 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான ஓட்டப் போட்டியை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் 441 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், 2-வது பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 2 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பாலமுருகன் வழங்கினார்.

    பெண்கள் விளையாட்டு விடுதி மேலாளர் சண்முகப்பிரியா, உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
    • பள்ளிக்கு சென்றபோது துணிகரம்

    செங்கம்:

    செங்கம் அடுத்த சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 57). இந்த நிலையில் கூலி தொழிலாளியின் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மகளிடம் கோவிந்தராஜ் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவியிடம் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும் செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு கோவிந்தராஜை கைது செய்தனர்.

    • மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே தளரப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிராமன் (வயது 50). இவர் தனது வீட்டின் பின்புறமாக மாடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான கன்றுகுட்டியை திருடி சென்று விட்டனர்.

    இது தொடர்பாக துளசிராமன் மோரணம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தது விசாரணை நடத்தினர்.

    இதில் செய்யாறு டவுன் புறநகர் பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி(37),செய்யாறு கண்ணியம் நகரைச் சேர்ந்த மதன்(35), முருகன்(38), ஆகியோர் திருடியது தெரியவந்தது.

    இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சக்கரவர்த்தி மற்றும் மதனை கைது செய்தனர். மேலும் முருகனை தேடி வருகின்றனர்.

    • ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், புதுப்பாளையம் யூனியன் சேர்மன் சி.சுந்தரபாண்டியன் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்வில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. அப்போது கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் பொன்னி சுந்தரபாண்டியன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • புதரில் இருந்து கூட்டமாக வந்து அவரை கொட்டியது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே வட திண்ணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகா(வயது 68). இவர் காலையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிக்கு சென்றார்.

    பின்னர் வேலை முடிந்து மதியம் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக புதரில் இருந்த குளவிகள் கூட்டமாக வந்து அவரை கொட்டின. இதில் படுகாயம் அடைந்த கனகாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சை க்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கனகா இறப்பு தொடர்பாக அவரது மகன் விஜய் பிரகாஷ் அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சப் இன்ஸ்பெக்டர் கன்னி யப்பன் தலைமையிலான போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீபத் திருவிழாவிற்குள் முடிக்க நடவடிக்கை
    • அமைச்சர் எ.வ.வேலு தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பு சார்பில் அருணாச லேஸ்வரர் தெப்பல் திருவிழா நடைபெறும் அய்யங்குளம் தூர்வாரப்பட்டு, சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    குளத்தின் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். 320 அடி அகலம் மற்றும் 320 அடி நீளத்துடன் 3 ஏக்கரில் அய்யங்குளம் அமைந்துள்ளது தற்போது ஆயிரம் நபர்களைக் கொண்ட தூய்மை அருணை அமைப்பின் சார்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    குளத்தின் நடுவில் உள்ள மைய மண்டபத்தில் சிவனின் சின்னமான நந்தி சிலை நிறுவப்பட உள்ளது. குளத்தின் அழகை இரவிலும் ரசிக்கும் வண்ணம் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படஉள்ளது.

    குளத்தின் சுற்றுப்புற சுவர்களில் திருக்குறள் மற்றும் திருப்பாவை எழுதப்படும்.

    சீரமைப்பு பணிகள் அனைத்தும் கார்த்திகை தீபத்திருவிழா விற்குள் முடிக்கப்படும் என பொது ப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

    கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, மு.பெ.கிரி எம்.எல்.ஏ, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட ப்பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்டப்பொறியாளர் ரகுராமன், தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் கார்த்திக் வேல்மாறன், நகராட்சி ஆணையாளர் என்.தட்சணாமூர்த்தி, ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், குணசேகரன், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் தரணிவேந்தன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசாரிடம் அந்த வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
    • பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வாலிபரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ரேணுகோபால்.

    இவர் தனது குடும்பத்துடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரேணுகோபால் வீட்டின் உள்ளே நுழைந்தார்.

    சத்தம் கேட்டு ரேணுகோபால் கண் விழித்து பார்த்தார். வீட்டிற்குள் வாலிபர் சட்டை இல்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசாரிடம் அந்த வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

    அப்போது போலீசார் அந்த வாலிபரிடம் நீ யார் என்று கேட்டபோது என்னுடைய பெயர் கமல்ஹாசன் என்றும், பின்னர் ரஜினி என்றும் கூறினார். இதனைக்கேட்டு போலீசாரும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் பொதுமக்கள் இன்னொரு முறை பெயரை கேட்டால் சிவாஜி என்று கூறுவான் என கூறியதால் போலீசார் அங்கு நின்றிருந்தவர்களும் சிரிப்பலையில் மூழ்கினர்.

    மேலும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வாலிபரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    வீட்டின் உள்ளே திருட முயன்ற வாலிபரிடம் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடிய விடிய பெய்தது
    • 96.40 மில்லி மீட்டர் மழை பதிவானது

    செங்கம்:-

    செங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளான ஜமுனாமரத்தூர், ஜவ்வாதுமலை அடிவாரப் பகுதிகள் உள்பட குப்பனத்தம், கிளியூர், பரமனந்தல், கரியமங்கலம், மண்மலை, முறையாறு, தாழையுத்து, அரட்டவாடி, நீப்பத்துறை, மேல்பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கன மழை கொட்டி தீர்த்தது.

    நள்ளிரவுக்கு மேல் தொடங்கிய மழையானது இடி மின்னலுடன் விடிய விடிய மழை பெய்தது. மேலும் செங்கம் பகுதியில் 96.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    ×