search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • பொதுமக்கள் அவதி
    • சாலையின் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டி ருந்ததால் வாகனங்கள் செல்ல முடியவில்லை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர் ணமியை முன்னிட்டு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் மற்றும் சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டன.

    கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்கள் அனைத்தும் நகரத்திற்கு வெளியே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன.

    வெளியூர் வாகன ஓட்டிகள் சாலை ஓரங்களிலேயே பார்க்கிங் இடமாக பயன்படுத்தி, ஆங்காங்கே நிறுத்தி வைத்திருனர்.

    சாலையின் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டி ருந்ததால், வாகனங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாத சூழல் நிலவியது.

    அதேபோல் கிரிவல பாதை மற்றும் நகர பகுதிக்குள் செல்ல ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே ஆட்டோ செல்ல வேண்டும் என அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது.

    ஆனால் விதிமுறைகளை ஏதும் பின்பற்றாமல் ஒருசில ஆட்டோக்கள் கிரிவல பாதையில் பொது மக்களுக்கு இடையூறாக ஆங்காங்கே சுற்றி திரிந்தன.

    நினைத்த இடத்தில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றுவது, மற்றும் இறக்குவது போன்ற போக்குவரத்து அத்து மீறல்களில் ஈடுபட்டனர்.

    கடும் போக்குவரத்து நெரிசல்

    பவுர்ணமி தினத்தை ஒட்டி திருவண்ணாமலை நகர பகுதியில் ஏராள மானோர் குவிந்ததால், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் சன்னதி தெரு, மாடவீதி, திருமஞ்ச கோபுர வீதி, சின்ன கடைத்தெரு, கொச மடத்தெரு, கோபால் பிள்ளையார் கோவில் தெரு, அய்யங்குளத் தெரு உள்ளிட்ட அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள தெருக்களிலும் போக்கு வரத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.

    இது குறித்து போக்குவரத்து போலீஸ் துறையினர் தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • வெந்நீர் போடுவதற்காக அடுப்பு பற்ற வைத்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    களம்பூர் அருகே கீழ்ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன், தச்சு தொழிலாளி. இவரது மனைவி லதா (வயது 46) இவர்க ளுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். லதா திருமலை கிராமத்தில் உள்ள பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி வெந்நீர் போடுவதற்காக அடுப்பு பற்ற வைத்தார். அப்போது அடுப்பு சரியாக எரியவில்லை என எண்ணெய் ஊற்றியபோது லதா அணிந்திருந்த சேலையில் தீப்பிடித்தது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து, அவரை சிகிச் சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கலெக்டர் உத்தரவு
    • திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றப்பட்டு உள்ளனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தாசில்தார்கள் பணி யிட மாற்றம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு திருவண்ணாமலை மாவட்ட இலங்கை தமிழர்கள் நலன் தனி தாசில்தாராகவும், அங்கிருந்த ஜெ.சுகுணா கீழ்பென் னாத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

    கீழ்பென்னாத்தூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் எம்.வெங்கடேசன் போளூர் தாசில்தாராகவும், செங்கம் தாசில்தார் கே.ராஜேந்திரன் திருவண் ணாமலை வட்ட வழங்கல் தனி தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த பி.முருகன் செங்கம் தாசில்தாராகவும் மாற்றப் பட்டு உள்ளனர்.

    • அழகான பெண் குழந்தைகள் பிறந்தன
    • மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் ஒரே ஆம்புலன்சில் அடுத்தடுத்து 2 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்தது. இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது.

    திருவண்ணாமலை அருகே நல்லான்பி ள்ளைபெற்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து நேற்று இரவு 108 ஆம்புலன்சுக்கு பிரசவ வலி தொடர்பான அவசர அழைப்பு வந்தது.

    உடனடியாக ஆவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் இயங்கும் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் பிரபு மற்றும் டிரைவர் கார்த்திகேயன் ஆகியோர் அங்கு விரைந்தனர்.

    பின்னர் சே.பேட்டை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவரின் மனைவி ஆண்டாள் (வயது 29) என்ற நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலியால் துடித்தார்.

    உடனடியாக அவரை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சென்றனர்.

    அவலூர்பேட்டை பைபாஸ், வடஆண்டாப்பட்டு ரெயில்நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது ஆண்டாளுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே உடனடியாக மருத்துவ உதவியாளர் பிரபு ஆம்புலன்சை ஓரமாக நிறுத்த டிரைவர் கார்த்திகேயனுக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் மருத்துவ உதவியாளர் பிரபு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அதில் ஆண்டாளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாய், குழந்தை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

    மீண்டும் அதே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அவசர அழைப்பு வந்தது.

    இந்த 108 ஆம்புலன்ஸ் மீண்டும் அங்கு சென்று மாதப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கத்தின் மனைவி சரண்யா (25) என்பவர் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்தார். அவரை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தனர்.

    சோமாசிபாடி தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது, சரண்யாவிற்கு பிரசவ வலி அதிகரிக்கவே உடனடியாக மருத்துவ உதவியாளர் பிரபு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அதில் சரண்யாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    பின்பு தாய், குழந்தை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

    • இன்று மாலை 4.30 மணிக்கு நிறைவு பெறுகிறது
    • 14 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றனர்

    வேங்கிக்கால்:

    புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் உள்ள அருணாச லேஸ்வரரை வலம் வந்து வழிபட்டனர்.

    புரட்டாசி மாத பவுர்ணமி நேற்று இரவு 6.41 மணிக்கு தொடங்கி இன்று மாலை 4.30 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    அரசு விடுமுறை தினம் என்பதால் கடந்த மாத பவுர்ணமியை காட்டிலும் நேற்று பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டது.

    காலை முதலே பக்தர்கள் குடும்பம் குடும்பமாக 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்து வழிபட்டனர்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் தினமும் கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று மழை இல்லாததால் பக்தர்கள் சிரமம் இன்றி கிரிவலம் வந்தனர்.

    அருணாசலேசுவரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பவுர்ணமி பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல்து றையினர் ஈடுபட்டனர்.

    • கிரிவலப் பாதையில் அமர்ந்திருக்கும் சாதுக்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு பக்தர்கள் உணவு பணம் கொடுக்கின்றனர்.
    • கிரிவல பக்தர்களிடம் பிச்சை எடுக்கும் சிறுவர்களை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் அங்குள்ள அண்ணாமலையை சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    கிரிவலப் பாதையில் அமர்ந்திருக்கும் சாதுக்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு பக்தர்கள் உணவு பணம் கொடுக்கின்றனர்.

    இதனை பயன்படுத்திக்கொண்டு கும்பல் ஒன்று பக்தர்களிடம் சிறுவர்களை வைத்து பிச்சை எடுத்து நூதன முறையில் பணம் பறித்து வருகின்றனர்.

    குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கைக்குழந்தையுடன் வந்து பெண்கள் பிச்சை எடுக்கும் அவல நிலையும் நீடித்து வருகிறது.

    இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சமூகநலத்துறை மற்றும் சைல்டு லைன் அமைப்பு உள்ளிட்டவைகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது கிரிவல பக்தர்களிடம் பிச்சை எடுக்கும் சிறுவர்களை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் கை குழந்தைகளை வைத்தபடி பெண்களும் மற்றும் சிறுவர்களும் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.

    இதனை கண்ட அதிகாரிகள் கிரிவலப் பாதையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், மோரணம், கொண்டம், கோசாலை உள்பட பல ஊர்களைச் சேர்ந்த 9 சிறுவர்கள் மற்றும் 5 சிறுமிகளை மீட்டனர்.

    இவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த சிறுவர், சிறுமிகளை பொம்மை விற்பனை செய்யலாம் என அழைத்து வந்து பிச்சை எடுக்க ஈடுபடுத்தி உள்ளனர்.

    அதிகாரிகள் சிறுவர்களை பிடிப்பதைக் கண்ட கைக் குழந்தையுடன் பிச்சை எடுத்த பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    கிரிவலப் பாதையில் மீட்கப்பட்டுள்ள 14 சிறுவர் சிறுமிகளும் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களை அழைத்து வந்தவர்கள் குறித்து திருவண்ணாமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளியில் படிக்கக்கூடிய இந்த குழந்தைகளை பிச்சை எடுக்க அழைத்து வந்தவர்களிடம் குழந்தை நல குழுமம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல திருவண்ணாமலையில் சாதுக்கள் மற்றும் சாமியார்கள் என்ற போர்வையில் பக்தர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் நடந்தன.

    இதனை தொடர்ந்து நேற்று திருவண்ணாமலைக்கு புதியதாக வந்துள்ள சாதுக்கள் சாமியார்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர்.

    • பார்ப்போரை பிரமிக்க வைத்துள்ளது
    • கனமழையின் காரணமாக ஏரி, குளம், குட்டைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் இருந்து, தண்ணீர் கொட்டுகிறது. இந்த தண்ணீர், நந்தி வாயில் இருந்து கொட்டுவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மலையில் உள்ள நந்தி தீர்த்தத்தில் தண்ணீர் கொட்டும் காட்சி பார்ப்போரை பிரமிக்க வைத்துள்ளது.

    ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் பல அருவிகள் காணப்படும் நிலையில், நந்தி வாயிலிருந்து தண்ணீர் ஊற்றுவதை காண உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    • ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு மேல் நகர்மேடுவை சேர்ந்தவர் திருமலை (வயது 19). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    திருமலை ஆன்லைன் மூலம் செல்போனை ஒன்றை ஆர்டர் செய்தார். அந்த செல்போனை சேத்துப்பட்டு பெரிய கொழப்பலூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (21).

    என்பவர் கொரியர் மூலம் திருமலை முகவரிக்கு எடுத்து வந்தார். அப்போது திருமலையை தொடர்பு கொண்டபோது தான் அங்கு இல்லை தீப்பந்தல் கூட்ரோடு அருகே வருமாறு கார்த்தியிடம் கூறினார். அந்த பார்சலை எடுத்துக் கொண்டு தீப்பந்தல் கூட்ரோட்டிற்கு சென்றார். அங்கு நின்றிருந்த திருமலையிடம் செல்போன் பார்சலை கொடுத்து பணத்தை கேட்டார்.

    அந்த செல்போனை வாங்கிக் கொண்டு பணத்தை கொடுக்காமல் திடீரென பைக்கை எடுத்துக்கொண்டு திருமலை அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

    செய்வதறியாமல் நின்ற கார்த்தி திருமலை முகவரிக்கு சென்று பார்த்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். அப்போது திருமலை கொடுத்த முகவரி போலியானதும் தான் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து கார்த்திக் செய்யாறு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவான திருமலையை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் திருமலையை கைது செய்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீசார் இது குறித்து திருமலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளிக்க சென்றபோது பரிதாபம்
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்

    சேத்துப்பட்டு:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், ஈருடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனிஷ்லாஸ் (வயது 60). திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த செய்யானந்தல் மதுரா கர்ணாம்பாடி ஏரியில் ஒருவர் மீன் பிடிப்பதற்காக குத்தகை எடுத்துள்ளார்.

    அதில் தனிஷ்லாஸ் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று குளிப்பதற்காக அவர் ஏரியில் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி கொண்டு நீரில் மூழ்கினார்.

    இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து சேத்துப்பட்டு தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினரும், போலீசாரும் ஏரியில் படகு மூலமும், தண்ணீரில் இறங்கியும் தனிஷ்லாசை தேடினர்.

    இரவு 8 மணி வரையும் தேடியும் அவர் கிடை க்கவில்லை . இதனால் தேடும் பணி கைவிடப்பட்டது. இன்று காலை தீயணைப்புத் துறையினர் தனிஷ்லாசை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர தேடலுக்கு பின்பு அவரை பிணமாக மீட்டனர்.

    போலீசார் தனிஷ்லாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் குளிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • உடல்நல பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வழுதலங்குணம் கிராமத் தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 34). இவர் கணவருடன் வாழாமல் சந்தோஷ் (5) என்ற மகனுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் லட்சுமி அடிக்கடி உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து (விஷம்) குடித்துள்ளார்.

    இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச் சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • உடல்நல பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வழுதலங்குணம் கிராமத் தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 34). இவர் கணவருடன் வாழாமல் சந்தோஷ் (5) என்ற மகனுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் லட்சுமி அடிக்கடி உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து (விஷம்) குடித்துள்ளார்.

    இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச் சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கிராமத்தின் வரைபடத்தை தத்ரூபமாக வரைந்து காட்டினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராமத்தில் வேலூர் விஐடி பல்கலைக்கழக வேளாண் மாணவிகள் கிராமப்புற வேளாண் பயிற்சி பெற்றனர்.

    வேலூர் விஐடி பல்கலைக்கழக வேளாண் துறை மாணவிகள் ச.சந்திர ரூபினி, வெ.சாருமதி, நி.ரேச்சல், ஜெ.லட்சுமி சுப்ரியா ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டம் பவித்திரம் கிராமத்தில் கிராம மக்களுடன் இணைந்து 3 மாத கால கிராமப்புற வேளாண் பயிற்சி பெற்றனர்.

    மாணவிகள் முக்கிய விவசாய பயிற்களின் விதைப்பு முறை, விவசாய மக்களின் தினசரி வாழ்க்கை முறை, கிராமத்தின் வரைபடம் உள்ளிட்டவைகளை தரையில் தத்ரூபமாக வரைந்து காட்டினர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வேளாண் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×