என் மலர்
திருவண்ணாமலை
- சூறாவளி காற்றுடன் மழை பெய்தது
- மின் இணைப்பு துண்டிக்கபட்டன
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கபட்டன.
மேலும் ஆரணி பழைய ஆற்காடு ரோடு அருகே சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ந்ததால் சாலை ஓரமாக இருந்த மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பம் மீது விழுந்தது.
இதனால் மின்கம்பம் உடைந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டன.
இதனையடுத்து தகவலறிந்த வந்த ஆரணி தீயணைப்பு துறை மற்றும் மின்சார வாரியதுறையினர் மின் இணைப்பை துண்டித்து விழுந்து கிடந்த மரத்தை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
- தீபாராதனை காண்பிக்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள அழகு சேனை கிராமத்தில் ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் புரட்டாசி மாத பிறப்பு மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசேஷ பூஜை நடைபெற்றது.
இதில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பூஜையில் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- நண்பருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்யாறு:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒப்பந்தவாடியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 48). திருப்பதியில் பேக்கரியில் வேலை செய்து வருகிறார்.
இவரது மகன் தமிழரசன் (21). இவர் செய்யாறு கன்னியம்மன் கோவில் தெருவில் பாட்டி வீட்டில் தங்கி பட்டப்படிப்பை முடித்து வேலை தேடி வந்தார்.
சென்னைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறினார். நேற்று இரவு சென்னையில் உள்ள தனது நண்பருக்கு போன் செய்து எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நான் தூக்கு போட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து செய்யாறில் உள்ள நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக நண்பர்கள் தமிழரசன் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அப்போது தமிழரசன் தூக்கு போட்டு தொங்கி நிலையில் கிடந்தார்.
அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தமிழரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து செய்யாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தமிழரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடு
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த செம்பூரில் விநாயகர் சதுர்த்தி 2-ம் நாள் பூஜையில் 1008 பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த பிஸ்கட் அலங்கார விநாயகரை வந்தவாசியைச் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வியப்புடன் பார்த்து தரிசனம் செய்தனர்.
- இ- சேவை மையம் மூலமாக மேல் முறையீடு செய்யலாம்
- கலெக்டர் தகவல்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கலெக்டர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு செப்டம்பர் 15-ந் தேதி அன்றே உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் எண்களை இணைக்காத வங்கி கணக்குகளுக்கு உரிமைத் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது.
இதனை சரி செய்து விரைவில் வங்கி கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்தை தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம். வங்கியில் வரவு வைத்த அன்றே எடுக்க வேண்டும் என்று சொல்லப்படும் தகவல் தவறானது.
ஒரே நேரத்தில் அனைவரும் வங்கிக்கு சென்று பணம் எடுப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. வங்கி கடன் மற்றும் சேவை கட்டணத்திற்காக உரிமைத் தொகையை பிடித்தம் செய்யும் வங்கிகள் குறித்து 1100 என்ற கட்டணமில்லா எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த திட்டத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றால் 30 நாட்களுக்குள் இ- சேவை மையம் மூலமாக மேல் முறையீடு செய்யலாம்.
விண்ணப்ப நிலை குறித்து தகவல் அறிய https://kmut.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும் கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களுக்கு சென்று விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் ஒரு தகுதியான பெண்கள் கூட விடுபடக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மனைவி கைது
- ஒருவரையொருவர் சர மாரி தாக்கி கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல் பூதேரி கிராமத்தை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 37), கூலி தொழிலாளி.
இவ ரது மனைவி மைதிலி(35). இவர் சென்னை அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி மைதிலியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், நேற்று முன் தினம் இரவு குடிபோ தையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் மைதிலியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, ஒருவரை யொருவர் சர மாரி தாக்கி கொண்டனர்.
ஆத்திரமடைந்த மைதிலி, மணிகண்டனை கீழே தள்ளிவிட்டார். இதில் அவர் பலத்த காயமடைந்து மயங்கி கீழே விழுந்தார்.இதை கவனிக்காத மைதிலி தூங்க சென்றுவிட்டார்.
நேற்று காலை மைதிலி மயங்கிய நிலை யில் இருந்த மணிகண் டனை எழுப்ப முயன்றார். ஆனால், அவர் எழுந்தி ருக்கவில்லை. அப்போது மணிகண்டன் இறந்தது தெரியவந்தது. இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல றிந்த மோரணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருவண்ணா மலை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மைதி லியை நேற்று கைது செய் தனர். பின்னர், அவரை மாஜிஸ்திரேட் முன்னி லையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வீரவணக்கம் செலுத்தப்பட்டது
- பலர் கலந்து கொண்டனர்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தெற்கு மாவட்ட பாமக செயலாளர் ஏந்தல் பக்தவச்சலம் தலைமையில் மெழுகுச் சுடர் ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் இரா.காளிதாஸ், முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், வக்கீல் ஆனந்தன், மாவட்ட பொருளாளர் வீரம்மாள், மாவட்ட துணை செயலாளர் கான்டீபன், நகர செயலாளர்கள் உதயகுமார், கார்த்திகேயன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் பாலு, ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், ராஜ்குமார், நகர தலைவர் ரவி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி, கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து விளக்கினர்
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் மதுரை எழுச்சி மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மண்டி தெருவில் நடைபெற்றது.
நகர கழக செயலாளர் கே.வெங்கடேசன் தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் ஜனார்த்தனம், ரவிச்சந்திரன், அருணகிரி, பூக்கடை கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், சேவூர் எஸ். ராமச்சந்திரன் கழக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, கழகப் பேச்சாளர் சிட்கோ சீனு ஆகியோர்கள் கலந்து கொண்டு அண்ணாவின் அரசியல் வாழ்வு, அரசியல் பண்பாடு, நாகரிகம், தற்போதைய ஆட்சியின் அவலங்களை சுட்டிக்காட்டி பேசினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அரங்கநா தன், மகேந்திரன், குணசீலன், துரை, மற்றும்தணிகாசலம், சுரேஷ், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- ஹீட்டரை ஆன் செய்த போது விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
போளூர்:
போளூர் அடுத்த பொன்நகரை சேர்ந்தவர் சுதாகர் (25). விவசாயி. மனைவி வினோதினி (வயது 23).
மகன் மிதுன் (3). வினோதினி நர்சிங் முடித்துவிட்டு போளூர் தனியார் மருத்துவ மனையில் வேலை செய்து வந்தார். தற்போது அவர் 8 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை குளிப்பதற்காக வினோதினி ஹீட்டர் சுச்சை ஆன் செய்தார். அப்போது அதிலிருந்த மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி எரியப்பட்டு மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
வெகு நேரம் ஆகியும் வினோதினி வராததால் சந்தேகம் அடைந்து உறவினர்கள் குளியலறைக்கு சென்று பார்த்தனர். அப்போது வினோதினி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் அவர்கள் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து போளூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வினோதினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 மாத கர்ப்பிணி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உபகரணங்கள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி அடுத்த பையூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் சாலை பணியாளர் சங்கத்தின் 24-ம் ஆண்டு விழா செய்யாறு கோட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர் சங்கத் தலைவர் மனோகரன் பங்கேற்று சாலை பணியாளர் சங்க கொடியை ஏற்றினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
மேலும் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதில் அரசு ஊழியர்கள் வட்ட தலைவர் பாஸ்கரன்,வட்டக் கிளைச் செயலாளர் பரசுராமன்,ஓய்வூதிய சங்க தலைவர் அமர்தலிங்கம் மற்றும் கோட்டை நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியில் சாலை பணியாளர் சங்க நிர்வாகி எழிலன் நன்றி கூறினார்.
- சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு
- சாமி தரினம் செய்தனர்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு, கொழுக்கட்டை, சுண்டல், கரும்பு பொறி உள்ளிட்ட உணவு பொருட்களை வைத்து படையிலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினம் செய்தனர்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
- புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலில் கடந்த 1993-ம் ஆண்டுக்கு பின்னர் பக்தர்கள் சார்பில், மகாசம்ரோக்ஷனம் நடந்தது.
கோவில் வளாகத்தில் யாக பூஜை செய்து பாலாய பூஜைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து மூலவர், ராஜகோபுரம், கருடாழ்வார், விநாயகர், ஆண்டாள், ஆஞ்சநேயர் ஐயப்பன், துர்க்கையம்மன் ஆகிய சிலைகளுக்கு புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது.
மேலும் அத்தி மரப்பலகையில் ஆவாகனம் செய்து தனி அறையில் வைத்து தினமும் பூஜைகள் நடத்தப்பட உள்ளது.
இதில் கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், துணை தலைவர் குமார், வார்டு உறுப்பினர்கள், பெரிய தனம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.