என் மலர்
திருவண்ணாமலை
- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
- பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்
திருவண்ணாமலை:
தமிழ்நாட்டு மக்களுக்காக 24 மணிநேரமும் தனது உடலை வருத்தி தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்துக் கொண்டிருக்கிறார் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடையூர் மற்றும் அத்தியந்தால் ஆகிய கிராம ஊராட்சிகளில் பொது மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு மனுக்களை பெற்றார்.
அப்போது அமைச்சர் பேசியதாவது:-
கிராமப்புற மக்களுக்கு தேவையான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. மக்களின் தேவை அறிந்து திட்டங்களை தீட்டி அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.
குறிப்பாக இந்த ஆட்சியில் பெண்களுக்கான சலுகைகள் மற்றும் திட்டங்கள் அதிக அளவில் நிறைவேற்றப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15-ந் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளில் தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
தமிழ்நாட்டு மக்களுக்காக 24 மணிநேரமும் தனது உடலை வருத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் உத்தமர் தலைமையிலான நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து துறை அலுவலர்களுடன் இங்கு வந்துள்ளேன்.
நீங்கள் அளிக்கும் மனுக்கள் உங்களுக்கு ஆணைகளாக கிடைக்கும். தமிழ்நாடு இன்று சுபிட்சமாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கலெக்டர் பா.முருகேஷ், கூடுதல் கலெக்டர் ரிஷப், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, சப் - கலெக்டர் மந்தாகினி, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், மெய்யூர் சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- பஸ்சில் இருந்து இறங்கியபோது பரிதாபம்
- வழக்குப்பதிவு செய்து விசாரணை
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு நிர்மலா நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி. இவரது தாயார் பாத்திமா (வயது 63). இவர் திருவண்ணா மலை அருகே மருத்துவாம்பாடியில் உள்ள கணவர் லூர்து சாமியை வாரத்துக்கு ஒருமுறை சந்தித்து விட்டு வருவது வழக்கம்.
அதன்படி பாத்திமா மருத்துவாம்பாடிக்கு சென்றுவிட்டு மீண்டும் சேத்துப்பட்டுக்கு பஸ்சில் வந்தார். நிர்மலா நகர் வந்தவுடன் பஸ்சின் படிக்கட்டில் இறங்கிய போது திடீ ரென பாத்திமா தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சேத்துப்பட்டு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆட்டோ பறிமுதல்
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
செய்யாறு:
செய்யாறு அடுத்த ஏறையூரை சேர்ந்தவர் முனுசாமி (வயது 55). விவசாயி.
இவருக்கு வீட்டின் அருகே ஒரு ஏக்கரில் சொந்தமாக நிலம் உள்ளது. அதில் இவர் கொட்டகை அமைத்து 30 ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆடுகள் சத்தம் கேட்டுள்ளது. வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது 2 வாலிபர்கள் ஆட்டோவில் 3 ஆடுகளை ஏற்றி கொண்டிருந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முனுசாமி சத்தம் போட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் வாலிபர்கள் ஆட்டோவை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இது குறித்து செய்யாறு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடிச் சென்ற வாலிபர்களை தேடி வந்தனர்.
நேற்று செய்யாறு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அதிலிருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் செய்யாறு டவுன் வெங்கட் ராயன்பேட்டையை சேர்ந்தவர்கள் தமிழரசன் (28), மொய்தீன் (31) என்பதும், முனுசாமியின் ஆடுகளை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பொதுமக்கள் மீட்டனர்
- பாதூர் வனப் பகுதியில் விட்டனர்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த பாதூர் வனப்பகுதியில் மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளது.
இந்த நிலையில் வெண்மந்தை கிராமத்துக்குள் நுழைந்து சுமார் 5-க்கும் மேற்பட்ட மான்கள், வயல்வெளியில் சுற்றித்திரிந்தன.
இதனைக் கண்ட நாய்கள் மான்களை துரத்தி துரத்தி கடித்து குதறியது. இதில் சில மான்கள் அங்கிருந்து தப்பி ஓடியது. அதில் இரண்டரை வயதுள்ள ஒரு பெண் புள்ளிமான் மட்டும் நாய்களிடம் சிக்கி கொண்டது. நாய்கள் கடித்ததில் மான் காயமடைந்தது.
அங்கிருந்த பொதுமக்கள் நாய்களை விரட்டிவிட்டு காயமடைந்த மானை மீட்டனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆரணி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரக அலுவலர் ரவிக்குமார், வனவர் காளிதாஸ், வனக் காப்பாளர் அபர்ணா ஆகியோர், அந்த மானுக்கு உரிய சிகிச்சை அளித்து பாதூர் வனப் பகுதியில் கொண்டு போய் விட்டனர்.
- வேலை கிடைக்காத விரக்தியில் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி டவுன், ஆரணி பாளையம் கே.கே. நகரை சேர்ந்தவர் நடராஜன். நெசவு தொழிலாளி.
இவரது மனைவி லட்சுமி, மகன்கள் பார்த்திபன், கணேஷ் (வயது 32). கணேஷ் டிப்ளமோ முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.
வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் காண ப்பட்டார். குடும்பத்தினர் ஆற்காடு பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தனர்.
கணேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் கணேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கணேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
- கைரேகை தடயங்களை சேகரித்தனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட் டம் ஆரணி அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 65), சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி மரகதம்.
நேற்று காலை 10.30 மணி அளவில் கணவன்-மனைவி இருவரும் வீட்டின் அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலயத் திற்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றி ருந்தனர். அந்த நேரத்தில் வீடுபுகுந்த கும்பல் 23 பவுன் நகைகளை திருடி சென்று விட்டது.
இது குறித்து சண்முகம் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் துணை போலீஸ் சூப்பி ரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) சுப்பிர மணி, சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் அங்குவந்து விசாரணை நடத் தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கைரேகை தடயங்களை சேகரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் தனி படை அமைத்து தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திருவண்ணாமலையில் நாளை நடக்கிறது
- அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றுகிறார்
திருவண்ணாமலை:
தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை தி.மு.க. விவசாய அணி கொண்டாட உள்ளது.
இதனையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை-திருக்கோவிலூர் ரோடு, சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை மண்ட லத்திற்குட்பட்ட தி.மு.க. விவ சாய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
விவாசய அணி மாநில தலைவர் என்.கே.கே.பெரியசாமி தலைமை தாங்குகிறார். ஆலோசனை க்கூட்டத்தில் பொதுப்ப ணித்துறை அமைச்சரும், உயர்நிலை செயல்தி ட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
கூட்டத்தில் விவசாய அணி மாநில செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன், மண்டல பொறுப்பாளர்கள் டேம் வெங்கடேசன், ர டி.எம்.அரியப்பன், ஜி.புருஷோத்தமன், சூரப்பட்டி சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
எனவே ஆலோசனைக்கூட்டத்தில் திருவண்ணாமலை மண்டலத்திற்குட்பட்ட திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, சேலம் மத்தியம், சேலம் கிழக்கு, மேற்கு, தர்மபுரி கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, திருப்பத்தூர், ராணிப் பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய அணி மாவட்ட தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. வெளி யிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.
- 3 பேர் பலி
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வங்காரம் மதுரா ஆவணவாடி ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகரை சேர்ந்தவர் நாவப்பன். இவரது மகன்கள் கன்னியப்பன் (வயது 50), குரு நாதன் (45). அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் ரவி (50).
இவர்கள் 3 பேரும் ஒரே மொபட்டில் காமராஜர் நகரில் இருந்து வந்தவாசி நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர்.
வந்தவாசி - சேத்துப்பட்டு செல்லும் நெடுஞ் சாலையில் வங்காரம் கூட்டு ரோடு பகுதியில் போளூர் நோக்கி சென்று கொண்டிருந்த மினி பஸ் திடீரென மொபட் மீது மோதியது.
இதில் மொபட்டில் வந்த அண்ணன், தம்பி உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னூர் போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதல் பரிசாக ரூ.10 ஆயிரம்
- ஆறுதல் பரிசாக 7 பேருக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டது
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில் இன்று காலை நடந்த மாரத்தான் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டி அண்ணா நுழைவு வாயில் வழியாக கிரிவலப்பா தையில் உள்ள அபய மண்டபத்தில் நிறைவு பெற்றது.
5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த மாரத்தான் போட்டியில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் பரிசாக, ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க ப்பட்டது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என 3 பிரிவாக இந்த பரிசுகள் வழங்கப்பட்டன. ஆறுதல் பரிசாக 7 பேருக்கு தலா ரூ.1000 வழங்கப்ப ட்டது.
அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- மனைவி -மாமியார் மீது வழக்கு
- கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து, மனைவி வாழ்ந்து வந்தார்
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (45) ஓய்வுபெற்ற ராணுவ வீரர்.
இவரது மனைவி உஷாராணி (37). தம்பதியினருக்கு பரத்குமார் (13) என்ற மகனும், காவியஸ்ரீ (10) என்ற மகளும் உள்ளனர்.
சுரேஷிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உஷாராணி, கணவனை பிரிந்து கண்ண மங்கலம் அருகே உள்ள அர்ச்சுனாபுரம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி சுரேஷ் தனது மாமியார் வீட்டிற்கு சென்று, மனைவி உஷாராணியை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். கணவன், மனைவி இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த உஷாராணி மற்றும் அவரது அவரது தாய் பூஷணம் ஆகிய 2 பேரும் சேர்ந்து,' நீ செத்தால் தான் எங்களுக்கு நிம்மதி' என கூறி, சுரேஷ் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தனர்.
தீக்காயங்களுடன் அலறியபடி தெருவுக்கு வந்த சுரேஷை, அப்பகுதி மக்கள் காப்பாற்றி, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் அடுக்க ம்பாறை அரசு மருத்துவ மனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.
இதுகுறித்து சுரேஷ் தந்த வாக்கு மூலத்தின் பேரில் கண்ண மங்கலம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் மகாலட்சுமி, உஷாராணி, பூசணம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிறந்த நாள் விழாவிற்கு சென்று திரும்பிய போது விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த சங்கர் (வயது 20 ) பலசரக்கு கடையில் வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் செய்யாறு பகுதியில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவிற்கு சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும் பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
மாமண்டூர் பகுதியில் வரும்போது வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த சங்கரை கிராம பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சங்கர் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 20 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை வழங்கினார்
- விண்ணப்பங்களை நிலுவையில் வைத்திருக்க கூடாது என அறிவுரை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் வங்கியாளர்களுக்கான சிறப்பு ஆய்வுக் கூட்டம் மற்றும் தொழில் கடன் வழங்கும் முகாம் நடந்தது.
முகாமிற்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கி மாவட்ட தொழில் மையம் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.2.61 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை வழங்கி பேசினார்.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு வங்கிகள் துரிதமான முறையில் கடன் உதவிகளை வழங்க வேண்டும். அரசின் மானியத்துடன் கூடிய கடன் விண்ணப்பங்களை வங்கிகள் 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் வைத்திருக்க கூடாது என கூறினார்.
இதில் மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவி, மகளிர் திட்ட இயக்குநர் சையித் சுலைமான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவா தாட்கோ மேலாளர் ஏழுமலை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.