என் மலர்
திருவண்ணாமலை
- சாலையின் தடுப்பு சுவர்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கூறினார்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கீழ் சாத்தமங்கலம் கிராமம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை வந்தவாசி எம்.எல்.ஏ அம்பேத்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்/ அப்போது சாலை விரிவாக்கம் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் கேட்டார்.
பின்னர் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் சாலையின் தடுப்பு சுவர்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கூறினார்.
ஆய்வின் போது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ் தரணிவேந்தன், நகர செயலாளர் தயாளன், ஒன்றிய செயலாளர் ஆர்யாத்தூர் பெருமாள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- அமைச்சர் எ.வ.வேலு தகவல்
- ஒரு கோடியே 58 லட்சம் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பாளையம், அடிஅண்ணாமலை, தேவனந்தல் ஆகிய கிராம ஊராட்சியில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பெற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் திராவிட மாடல் என்ற அற்புதமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல திட்டங்கள் மக்களை தேடி வந்து கொண்டிருக்கிறது. அய்யம்பாளையம் கிராம ஊராட்சியில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி, ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணி, பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி, பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேவனந்தல் ஊராட்சியில் ஒரு கோடியே 58 லட்சம் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கு அரசு பஸ்சில் கட்டணம் இல்லா பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், கல்லூரி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அடிஅண்ணாமலை பகுதியில் கல் குவாரி தொடர்புடைய பணிகளை செய்து வந்தவர்கள் ஓட்டல், பெட்டிக்கடை உள்ளிட்ட தொழில்களை செய்ய முன்வந்தால் அவர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவிகளை நான் பெற்றுத் தருகிறேன்.
மக்களின் மனதை புரிந்து உதவி செய்து வருகிறேன். நான் சம்பாதிக்கும் பணத்தை நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறேன் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் ரிஷப், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி ஸ்ரீதரன், கோட்டாட்சியர் மந்தாகினி, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், நகராட்சி ஆணையாளர் ந.தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவர் சு.ராஜாங்கம், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், குட்டி புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வாலிபர் கைது
- பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அடுத்த, கெங்காபுரம், கிராமத்தை சேர்ந்தவர் தயாளன். இவர் தனது வீட்டில் இரவில் தூங்கிக் கொண்டி ருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் வீடு புகுந்து பித்தளை பாத்திரங்களை திருடிக்கொண்டு ஓடினார். இதை பார்த்த தயாளன் மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை விரட் டிச்சென்று பிடித்து சேத்துப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஆரணியை சேர்ந்த மனோஜ் (வயது 20) என்பது தெரிய வந் தது. அவர் மீது சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து ஸ்கூட்டர், பாத்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மேளத்தாளத்துடன் ஊர்வலமாக சென்றனர்
- வழுக்கு மரம் ஏறுதல், உரியடி திருவிழா நடந்தது
ஆரணி:
ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி தலைமையில் நடைபெற்றது.
மேலும் காலையில் மூலவர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தன. பெருமாள் கோவிலிருந்து 108 பெண்கள் பால்குடம் ஏந்தி மேளத்தாளத்துடன் ஊர்வலமாக கிருஷ்ணர் கோவில் அடைந்தனர்.
பின்னர் மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனையடுத்து வழுக்கு மரம் ஏறுதல் உரியடி திருவிழாவை தொடர்ந்து கிருஷ்ண லீலைகள் என்ற பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாட்டை கோவில் நிர்வாக தலைவர் ஜெயராமன், ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி, நிர்வாகிகள் தர்மன், விஜயகுமார் உட்பட பலர் செய்து வருகின்றனர்.
- போக்சா சட்டத்தில் நடவடிக்கை
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கப்பட்டார்
புதுப்பாளையம்:
விழுப்புரம் மாவட்டம், கண்டமானடி கிராமம் கன்னிமாநகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 27). இவர் செங்கம் அடுத்த காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் சமூக வலைத்தளம் மூலம் பழகி வந்தார்.
மோகன்ராஜ், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி புதுபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புதுப்பாளையம் போலீசார் இந்த வழக்கை, செங்கம் அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றம் செய்தனர். அதன் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோ ன்மணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனர். கைது செய்ய ப்பட்டவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
- 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
ஆரணி:
ஆரணி டவுன் காமராஜர் சிலை அருகே தேசிய காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நடை பயணம் நகர தலைவர் பொன்னையன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காங்கிரஸ் தலைவர் தவணி அண்ணாமலை பங்கேற்றார்.
மேலும் நடைபயணம் காமராஜர் சிலை தொடங்கி பழைய பஸ் நிலையம் மார்க்கெட் வீதி மண்டி தெரு வழியாக காந்தி சிலையில் முடிந்தன.
பின்னர் நடை பயன பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடை பயன சாதனைகள் எடுத்துரைத்தும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் செல்வம் நகர நிர்வாகிகள் உதயகுமார் பிள்ளையார் குருமூர்த்தி, சம்பந்தம், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியம், வாச்சனூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார். அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ஒ.ஜோதி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தில் திறந்து வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் திராவிட முருகன், ஞானவேல், மாவட்ட பிரதிநிதி மா.கி. வெங்கடேசன் மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாகன ஓட்டிகளுக்கு டி.எஸ்.பி. அறிவுரை
- 5 நபர்களுக்குதலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது
செய்யாறு:
செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், உதவி ஆய்வாளர்கள் சங்கர், கன்னியப்பன் உள்பட போலீசார் நேற்று ஆற்காடு சாலை அரசு கல்லூரி அருகே வாகன தணிக்கை செய்தனர்.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை நிறுத்தி, அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், வாகனத்திற்குரிய ஆவணங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டும் என்றும், மது அருந்திவிட்டு வாகன ஓட்டக்கூடாது என்றும், டிஎஸ்பி வெங்கடேசன் அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினார்.
அப்போது மது அருந்தி விட்டு வந்த 5 நபர்களுக்குதலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
- வசூல் செய்யும் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் கட்டவில்லை என புகார்
- போலீசார் சமரசம் செய்தனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தில் கிளை அஞ்சலகம் உள்ளது.இந்த அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அம்மாபாளையம் கிராமத்தில் வசிக்கும் ராகினி என்பவர், சேமிப்பு கணக்கில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளார்.
ராகினி, அம்மாபாளையம் கிராமத்தில் வசூல் செய்து வரும் பணத்தை சம்பந்த ப்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கில் கட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் ராகினிக்கு செங்கம் அருகே வசிக்கும் நபருடன் திருமணமானது.திருமணமான பின்னர் தபால் சேமிப்பு கணக்கில் பணம் வசூல் செய்யும் பணியை, அம்மாபாளையம் கிராமத்திலேயே செய்து வந்தார்.
ஆனால் வசூல் செய்யும் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் கட்டாமல் இருந்து வந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் தபால் அலுவலக அலுவலர்களிடம் புகார் செய்ததன் பேரில், விசாரணை நடத்தினர்.
இதனால் தற்போது தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் ராகினியிடம் நேரில் விசாரணை நடத்த தபால் அலுவலக அலுவலர்களிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒண்ணுபுரம் அஞ்சலகத்திற்கு வந்திருந்தனர்.
இந்த விசாரணைக்கு செங்கம் பகுதியில் தனது கணவர் வீட்டில் வசிக்கும் ராகினி நேரில், விளக்கம் அளிக்க வந்தார்.
அம்மாவின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், ஒண்ணுபுரம் அஞ்சலகத்தில் வந்து ராகினியிடம் தாங்கள் கட்டிய பணத்தை வழங்கவேண்டும் என முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமரசம் செய்தனர். தபால் அலுவலர்கள் முறைப்படி ராகினியிடம் பணம் வசூலித்து வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைப்பதாக தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
- கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை வ.உ.சி. நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் விஜய் (வயது 25).
இவர் தொழில் ரீதியாக அவ்வபோது வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு ஒரு வாரம், 10 நாட்கள் கழித்து திரும்பி வீட்டிற்கு வருவது வழக்கம்.
அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து தகவலும் விஜய்யின் பெற்றோருக்கு கிடைக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அவர் கிடைக்காததால் கடந்த 21- ந்தேதி திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விஜயின் செல்போன் எண்ணை சோதனை செய்த போது அவர் கடைசியாக அவரது நண்பரான திருவண்ணா மலை பே கோபுரம் தெருவை சேர்ந்த அருண் என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அருண் கூறியதாவது;-
விஜயும், நானும் கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தோம், அவசர தேவைக்காக விஜயிடம் இருந்து நான் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றேன். அதை என்னால் திருப்பி தர முடியவில்லை. இதனால் விஜய் என்னை பணத்தை திருப்பி கொடுக்குமாறு தொந்தரவு கொடுத்தார்.
அவரை அழைத்துக்கொண்டு அய்யம்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றேன். பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கிணற்றின் அருகில் அமர்ந்து மது அருந்தினோம். மது போதையில் இருந்த விஜயை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழுகிய நிலையில் கிடந்த விஜய் உடலை கிணற்றிலிருந்து மீட்டனர். இதையடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பிரசாதங்கள் வழங்கப்பட்டது
- எராளமனோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலில் நேற்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதைமுன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் உற்சவர் ஸ்ரீகிருஷ்ணர் கருடவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதேபோல் கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேசபெருமாளுக்கு ஸ்ரீகிருஷ்ணர் ஜெயந்தி விழா பூஜை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம கோவில் விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் சார்பில் திருவண்ணா மலையில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது.
விழாவிற்கு மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார்.
கலெக்டர் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து தடகள போட்டிகளை கொடிய சைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், பெண்கள் விளையாட்டு விடுதி மேலாளர் சண்மு கப்பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி வரவேற்றார். சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
இதில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமை களை வெளிப்படுத்தினர்.
இன்று நடைபெற்ற போட்டிகளில் தேர்வு செய்யப்படும் வீரர் மற்றும் வீராங்கனைகள் வருகிற 14-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிகளில் திருவண்ணா மலை மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்வார்கள்.