என் மலர்
திருவண்ணாமலை
- படிக்கட்டில் தொங்கிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்
- கூடுதல் பஸ் இயக்க பெற்றோர்கள் வலியுறுத்தல்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் காலை மற்றும் மாலை என 2 வேளைகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
இக் கல்லூரியில் திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.
கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், காலை, பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் முண்டியடித்து ஏறியும், படிக்கட்டில் தொங்கிக் கொண்டும் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
இந்தநிலையில் பிற்பகல் வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது, பஸ்களில் இடம் பிடிப்பதில் ஆரணி பகுதிகளை சேர்ந்த மாணவர்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மாணவர்கள் 2 குழுக்களாக மோதிக்கொண்டனர்.
அப்போது, ஒருவரையொருவர் பிடித்து தள்ளிக்கொண்டு பலமாக தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மாணவர்களின் மோதலை கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த வழிதடங்கலில் கல்லூரி மற்றும் பள்ளி வேலைகளில் அரசு கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- 1,554 பள்ளிகளில் தொடங்க நடவடிக்கை
- சைக்கிள் வழங்கும் விழாவில் கலெக்டர் தகவல்
வேங்கிகால்:
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பா.முருகேஷ் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிளை வழங்கி பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 98.61 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று முதன்மை பள்ளியாக நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி திகழ்கிறது.
மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். அதற்கு நமது எண்ணங்கள் மற்றும் குறிக்கோள்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் கல்வியுடன், சமூகம் சார்ந்த தகவல்களையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இந்த மாத இறுதிக்குள் சைக்கிள் வழங்கப்படும்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்ச ரூபாயை ஒதுக்கி நகராட்சி பெண்கள் பள்ளி மாணவிகள் அமர்ந்து படிக்க இருக்கைகளை வழங்கியுள்ளார்.
மேலும் இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளார்.
வருகிற 25-ந் தேதி முதல் 554 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், துணைத் தலைவர் ராஜாங்கம், தமைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டிவிஎம் நேரு. அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் கோமதி குணசேகரன், அரசு வக்கீல் சீனுவாசன், கவிஞர் முருகையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- குழந்தை வரம் கேட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்
- இரவு சாமி வீதி உலா நடந்தது
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு தாலுகா கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமி குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று நடைபெறும்.
குழந்தை இல் லாத பெண்கள் இதில் பங் கேற்று வழிபட்டு கோவிலில் வழங்கும் பிரசாதத்தை முழங்காலிட்டு கைகளை பின்புற மாக கட்டியவாறு மண்சோறு சாப்பிடுவர்.
இந்த ஆண்டு குருபூஜையை முன்னிட்டு பரதேசி ஆறுமுக சாமி சமாதிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர் ஆகியவை அபிஷேகம் செய்யப்பட்டது.
குழந்தை வரம் கேட்டு வழி பட வந்த 1,200 பெண்கள் கோவில் முன்பு அமர வைக்கப்பட்டனர். அதில் பெரிய மேடை அமைத்து பல்வேறு யாகங்கள் நடந்தது.
பின்னர் குழந்தை வரம் கேட்டு வழிபட்ட பெண்க ளுக்கு பிரசாதம் தயார் செய்து குருபூஜை செய்து பல் வேறு பகுதியில் உள்ள சாதுக் கள் மூலம் வழங்கப்பட்டது.
அதனை முந்தானையில் வாங்கிய பெண்கள் கோவில் முன்பு உள்ள குளத்தில் படிக் கட்டில் முழங்காலிட்டு கைகளை பின்புறமாக கட்டிக் கொண்டு மண் சோறு சாப்பிட்டனர். வள்ளி, தெய்வானை முருகனுக்கு அலங்காரம் செய்து வைத்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் குழந்தை பெற்ற தாய்மார்கள் எடைக்கு எடை காசுகளை வைத்து துலாபாரத்தில் காணிக்கை செலுத்தினர். இரவு சாமி வீதி உலா வந்தது.
- கூட்டை கலைக்க முயன்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த மோரணம் ஏ காலனியை சேர்ந்தவர் பாலு (வயது 70).விவசாயி. இவரது மனைவி முருகம்மாள் (64). இவர்களுக்கு வாணி என்ற மகளும், சரவணன், நாராயணன் என்ற மகன்களும் உள்ளனர்.
இவர்களது வீட்டு மாடியில் குளவி கூடு கட்டி இருந்தது. அதனை அழிப்பதற்காக கடந்த 15-ந் தேதி பாலு உள்பட குடும்பத்தினர் வீட்டு மாடிக்கு சென்று குளவி கூட்டை கலைக்க முயன்றனர். அப்போது குளவி அனைவரையும் கொட்டி உள்ளது. இதில் பாலு படுகாயம் அடைந்தார். மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த பாலுவை மீட்டு குடும்பத்தினர் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது வரும் வழியில் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் பாலுவை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாலுவின் மகன் சரவணன் மோரணம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உரியவர்களிடம் எஸ்.பி. ஒப்படைத்தார்
- 5 லட்ச ரூபாய் மதிப்பிலானது
வேங்கிகால்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவான செல்போன் காணாமல் போன வழக்குகளை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசார ணையில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான 20 செல்போன்க ளை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட செல்போ ன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் அதன் உரிமை யாளர்க ளிடம் ஒப்படைத்தார்.
மேலும் சைபர் குற்றங்களில் இருந்து பாது காப்பாக இருப்பது குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
சைபர் கிரைம் கூடுதல் போலஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.
- 500 பேருக்கு வடை பாயசத்துடன் உணவு பரிமாறப்பட்டது
- கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் சுதந்திர தின விழா முனனிட்டு சிறப்பு வழிபாடு பொதுவிருந்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆர் வி சேகர், படவேடு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாமரைச் செல்விஆனந்தன், திமுக நிர்வாகிகள் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். இதில் 500 பேருக்கு வடை பாயசத்துடன் விருந்து பரிமாறப்பட்டது.
ராஜகோபுரம் முன்பு சுதந்திர தின விழாவை முன்னிட்டு செயல் அலுவலர் சிவஞானம் தேசியக்கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். மேலும் கோவில் மண்டபத்தில் அம்மனுக்கு காணிக்கையாக வந்த கைத்தறி சேலைகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், 500 ஏழை பெண்களுக்கு வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவஞானம், ஆய்வாளர் நடராஜன், ஓய்வு மேலாளர் மகாதேவன் கணக்காளர் சீனிவாசன் உள்பட கோயில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி அடுத்த நரியம்பாடி கிராமத்தில் தேவதை மண்டியம்மனுக்கு ஆடி அமாவாசை முன்னிட்டு மழை வேண்டியும், பெண்கள் பால் குட ஊர்வலம் நடைபெற்றது.
வரசக்தி விநாயகர் கோவிலிருந்து 108 பெண் பக்தர்கள் பால் குடம் சுமந்து பம்பை உடுக்கையுடன் கிராமதேவதை மண்டியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பாலாபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை வழங்கிய முன்னாள் மாணவர்கள்
- மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆரணி:
ஆரணி அடுத்த துரிஞ்சி குப்பம் கிராமத்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் முருகேசன் தேசிய கொடி ஏற்றி தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றுதல் உடற்பயிற்சி நடனம் சுதந்திர தின சிறப்பு உரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
துரிஞ்சி குப்பம் உயர்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் சென்னை குளோபஸ் குழும நிறுவன இயக்குநருமான பாபு குளோபஸ் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் 217 மாணவ மாணவிகளுக்கு புத்தக பை, பென்சில் பேனா உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கினார்.
இதேபோல் கடந்தாண்டு மற்றும் நடப்பு கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் ஊக்க தொகை வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் குளோபஸ் குழும பங்குதாரர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- அதிகாலை முதல் ஏராளமானோர் குவிந்தனர்
- ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் உள்ள இடங்களில் திதி கொடுத்தனர்
திருவண்ணாமலை :
ஆடி அமாவாசை என்பதால் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். போளூரில் உள்ள பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், காஞ்சி சங்கர வேத பாடசாலை ஆகிய இடங்களில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேடு பெரியமலை திருமணி சேறைவுடையார் சிவன் கோவில் வளாகம், பெரியகொழப்பலூர் திருக்குராஈஸ்வரர் கோவில் வளாகம், நெடுங்குணம் தீர்க்காஜல ஈஸ்வரர் கோவில் வளாகம், தேசூர் காசிவிஸ்வநாதர் கோவில் வளாகம், ரேணுகாம்பாள் கோவில் வளாகம் ஆகிய இடங்களில் சிவாச்சாரியார்களிடம் முன்னோர்கள் பெயரில் தர்ப்பணம் செய்தனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆரணி புத்திரகா மேட்டீஸ்வரர் கோவில் அருகாமையில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
இதில் திரளான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
அதேபோல் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் உள்ள இடங்களில் ஏராளமான மக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
- சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது
- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், தலையாம்பள்ளம்கிராம ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- வருடத்திற்கு ஆறு கிராம சபை கூட்டங்கள்ந டத்தப்படுகிறது.
கிராம சபை கூட்டங்கள் மூலம் அரசின் திட்டங்களான மக்களை தேடி மருத்துவம்,இல்லம் தேடி கல்வி, ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம், பள்ளிகளின் செயல்பாடு உள்ளிட்டஅனைத்து திட்டங்கள் குறித்து அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்து கூற வேண்டும்.
அப்போது தான் அரசு செயல்படுத்தும் திட்டங்களைபொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்பெற முடியும், கிராமத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்துஅறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பினால் அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் கிராமத்திற்கு தேவையான திட்டங்களை எடுத்துரைத்தால்அதனை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது. முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்மூலம் 3 கோடி சாலைகளை மேம்படுத்த ரூ.1 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கலைஞரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்கும்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கிராமங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்துமுடிக்க ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். முதல் - அமைச்சரின் காலை உணவு திட்டம் வருகிற 25-ந் தேதி முதல் அனைத்து ஊராட்சி பள்ளிகளிலும் தொடங்கப்பட உள்ளது.
அதேபோல் கலைஞரின் மகளிர்உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15 -ந் தேதி அன்று தமிழக முதல் அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி,பட்டா மாற்றம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் கூடுதல் கலெக்டர் ரிஷப், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த பால்வார்த்து வென்றான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 37), தொழிலாளி.
இவர் தனது பைக்கில் சந்தவாசலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்றார்.
அப்போது கல்வாசல் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சந்தவாசல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கார் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு தூசி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 228 மது பாட்டில்கள் கடத்தியது தெரிய வந்தது. விசாரணையில் சுருட்டல் கிராமத்தைச் சேர்ந்த மணி, முருகன், அன்பழகன் ஆகியோர் என தெரிந்தது.
போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.