என் மலர்
திருவண்ணாமலை
- 5 மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையினை கலெக்டர் வழங்கினார்
- மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கலெக்டர் முருகேஷ், இன்று புதிதாக 5 மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையினை வழங்கி பேசினார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பழங்குடி இன மாணவ, மாணவி களுக்கு தொழிற்பிரிவு வகுப்புக ளான பொருத்துநர், கம்மியர் மோட்டார் வண்டி, கம்பியாள், பற்றினைப்பவர், குழாய் பொருத்துபவர். தொழிற்துறை எந்திரவியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்ப பணியாளர், உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் தன்னியக்கு மயம், மேம்படுத்தப்பட்ட எந்திர தொழில்நுட்ப பணியாளர் போன்ற தொழிற்பிரிவு பாடங்களை பழங்குடி இன மாணவ, மாணவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கு தமிழ்நாடு அரசால் பயிற்சியாளர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் பயிற்சி கட்டணம் ஏதுமில்லை.
அனைத்து பயிற்சியா ளர்களுக்கும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.750-ம் மற்றும் விலையில்லா மடிக்கணினி, பாட புத்தகம், வரைபடக் கருவிகள், சீருடைகள், மூடுகாலணி, இலவசபேருந்து கட்டண சலுகை மாணவர்கள் தங்கி பயில விடுதி வசதிகள் அரசு பள்ளி மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.
தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளது. மாணவ, மாணவியர்கள் தங்கள் மதிப்பெண் அடிப்ப டையில் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கல்வி படித்து வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டும்.
மேலும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் புதிய மாணவர்கள் சேர்க்கை இன்று வரை 60 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
மேலும் இம்மாதம் 31.07.2023 வரை புதிய மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் என கலெக்டர் பேசினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் (ஆரணி) . தனலட்சுமி, மாவட்ட திட்ட அலுவலர் பழங்குடியினர் நலன் அலுவலர்.
ப.செந்தி ல்குமார், அரசினர் தொழிற் பயிற்சி முதல்வர்.ஆர்.ஜெய்சங்கர், ஜவ்வாது மலை ஒன்றிய குழுத்த லைவர் ஜீ வா மூர்த்தி. உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவ லர்கள் கலந்து கொண்ட னர்.
- கழிவு நீர் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு
- பாதியிலேயே திரும்பி சென்றனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள பையூர் ஊராட்சியில், புதிய காலனி பால்வாடி தெருவில் ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு பாலம் அமைக்கப்பட்டது.
புதிதாக அமைக்கப்பட்ட தரற்ற முறையில் இருப்பதாகவும், கல்வெட்டு பாலத்தின் வழியாக கழிவுநீர் செல்ல வழிவகை செய்யப்படவில்லையாம். இதனால் அந்த பகுதியில் கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று புதியதாக கட்டப்பட்ட கால்வாய் பணியை பார்வையிட அதிகாரிகள் பையூருக்கு வந்தனர்.
திடீரென்று பொதுமக்கள் திரண்டு சென்று அதிகாரிகளை முற்றுகையிட்டனர். மேலும், கடந்த ஒரு வாரமாக குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் காலரா, டெங்கு போன்ற நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கல்வெட்டு பாலத்தில் கழிவுநீர் செல்ல வழிவகை செய்யாமலேயே பணி முடிக்கப்பட்டுள்ளது எனக்கூறி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அதிகாரிகள் ஆய்வுப் பணியை முழுமையாக செய்யாமல் பாதியிலேயே திரும்பி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- டிரைவரை ஆபாசமாக திட்டி தாக்கினார்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அடுத்த ஆத்துவாம்பாடி கிராமத்தில் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே ஊரைச்சேர்ந்த சின்னராஜ் என்பவர் வலதுபுறமாக உள்ள பஸ் கண்ணாடியை உடைத்துள்ளார்.
இதனை தட்டிக் கேட்ட பஸ்சின் டிரைவர் மாதவனை ஆபாசமாக திட்டி தாக்கினார்.
இது சம்பந்தமாக அரசு பஸ் டிரைவர் மாதவன் சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து, சின்னராஜை கைது செய்தார்.
- அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
- நோய் தொற்று பரவும் அபாயம்
செங்கம்:
செங்கம் பகுதியில் பொதுமக்களின் நீர்ஆதாரமாக விளங்கும் செய்யாற்றில் தற்போது நீர்வரத்து இல்லை.
நகரில் பல்வேறு இடங்களில் இருந்து கழிவு நீர் கால்வாய்கள் மூலம் செய்யாற்றில் கழிவு நீர் கலக்கப்படுகிறது. குளம் போல் செய்யாற்றில் கழிவுநீரும், மலை போல் குப்பைகளும் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் செய்யாறில் குளம் போல் தேங்கி ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீரில் பன்றி ஒன்று செத்து மிதந்து கிடக்கிறது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செய்யாற்றில் செத்து மிதக்கும் பன்றியை அப்புறப்படுத்தி, செய்யாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், அதேபோல் அங்கு பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளதை அகற்றி சுகாதாரம் பேணி காத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தனிப்படை அமைத்து விசாரணை
- போலீசார் தேடி வருகின்றனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள கொளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் சம் பத்(வயது 58). இவர் இரும்பேடு கூட்ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி பச் சையம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள் ளனர்.
மேலும், சம்பத்தின் மகன்கள் இருவரும் ஜாம் ஷெட்பூர் டாட்டா நகரில் ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றனர்.
இரும்பேட் டில் உள்ள வீட்டில் மனைவியுடன் வசித்து வருகின்றனர். இந் நிலையில், கடந்த 2 வாரங் களுக்கு முன்பு வீட்டை பூட்டிக்கொண்டு சம்பத் தனது மனைவியுடன் டாட்டா நகரில் உள்ள மகன்களை பார்ப்பதற் காக சென்றுள்ளனர்.
மேலும், 'தனது சொந்த ஊருக்கு வருவதற்கு இன் னும் சில நாட்களாகும் என்பதால், சம்பத்தின் மனைவி தனது உறவினர் ஒருவரை வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வரு மாறு தெரிவித்துள்ளார்.
அதன்பேரில், அவரது உறவினர் சம்பத்தின் வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீட்டின் பின்புறம் உள்ள கேட்டின் பூட்டு உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ேள சென்று பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு பீரோ வில் இருந்த 24 பவுன், ரூ.2 லட்சத்தை மர்ம கும்பல் திருடிச்சென்றது தெரிந்தது.
மேலும், பீரோவில் நகைகள் வைத்திருந்த மணிபர்ஸ்களை வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் உள்ள பக் கெட்டில் தண்ணீர் நிரப்பி அதில் போட்டுவிட்டு சென்றனர்.
இது குறித்து, சம்பத் துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பத் தின் உறவினர்கள் ஆரணி தாலுகா போலீசாருக்கு தக வல் தெரிவித்தனர். 'அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், திருட்டு குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திரு டிச்சென்ற மர்ம கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- 10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்
- 24-வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், விவசாயிகளின் 10- அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் என 24-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், செயலாளர் ஏழுமலை, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கேசவன் என்கின்ற கோபி, கொள்கை பரப்பு செயலாளர் முனிராஜன், அமைப்பு செயலாளர் நடராஜன்உட்பட பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுசெயலாளர் நேதாஜி, இயற்கை விவசாயி அலெக்ஸ், இயற்கை வாழ்வியல் வல்லுநர் வத்தலக்குண்டு சௌந்தரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு 10-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினர்.
வேப்பிலை மந்திரிப்பு செய்து கோரிக்கை வைத்தனர், விவசாயிகள் அரைநிர்வாணத்துடனும், கோவணத்துடனும் நின்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- மகன் பிறந்தநாளுக்கு புத்தாடை எடுத்துக்கொண்டு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த பாஞ்சரை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 43) நெல் வியா பாரி. இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு துளசிராமன் (13), பிரசாந்த (11) என 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் துளசிராமனுக்கு வருகிற 30-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் புதியதாக புத்தாடை எடுப்பதற்காக ராஜாவும், ரேவதியும் நேற்று முன்தினம் இரவு வந்தவாசிக்கு சென்றனர்.
பின்னர் புது ஆடைகளை வாங்கிக் கொண்டு பைக்கில் கணவன், மனைவி வீடு திரும்பினர்.
வந்தவாசி திண்டிவனம் நெடுஞ்சாலை பொன்னூர் கூட் ரோடு அருகே வந்து கொண்டிருந்தனர். ஜப்திகாரணியில் இருந்து வந்தவாசி நோக்கி சென்ற மணிக்கண் டன் (22) என்பவர் ஓட்டி வந்த பைக்கும், ராஜா ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த ராஜா. மணிக் கண்டன் இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார். மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச் சம்ப வம் தொடர்பாக ரேவதி பொன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் பிறந்தநாளுக்கு துணி எடுத்து கொண் வீடு திரும்பும்போது விபத்தில் வியாபாரி இறந்ததால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- டீ தயாரித்து ஒவ்வொரு கிளாசிலும் ஊற்றி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார்.
- மக்கள் இந்த தேனீர் கடையை டீக்கடை கோவில் என அழைக்கின்றனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் முதியவர் ஒருவர் நடத்தும் டீக்கடை டுவிட்டரில் வைரலாகி வருகிறது. 80 வயதான சீக்கியர் அஜித்சிங் என்பவர் அந்த கடையை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அப்பகுதியில் 100 வருட பழமையான மரத்தின் கீழ் செயல்படும் இந்த டீக்கடையில் தேனீருக்கு என்று எந்த விலையும் நிர்ணயிக்கப்படவில்லை. அதாவது வாடிக்கையாளர் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ கொடுக்கலாம். அல்லது இலவசமாக கூட குடிக்கலாம்.
வீடியோவில் அஜித்சிங்கை சுற்றிலும் பாத்திரங்களும், கொதிகலனும் இருக்கிறது. அங்குள்ள அடுப்பில் டீ தயாரித்து ஒவ்வொரு கிளாசிலும் ஊற்றி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார். அங்குள்ள மக்கள் இந்த தேனீர் கடையை டீக்கடை கோவில் என அழைக்கின்றனர்.
எதற்காக டீயை இலவசமாக கொடுக்கிறீர்கள்? என அஜித்சிங்கிடம் கேட்ட போது அவர் கூறுகையில், தன்னலமற்ற சேவையை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதாகவே இதை பார்க்கிறேன் என கூறுகிறார். இந்த வீடியோவை பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் பகிர்ந்ததோடு, இனி எப்போதெல்லாம் நான் அமிர்தசரஸ் வருகிறேனோ, அப்போதெல்லாம் இந்த கடைக்கு சென்று டீ குடிப்பேன். அமிர்தசரசில் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. ஆனால் அடுத்த முறை இந்த நகரத்திற்கு வந்தால் பொற்கோவிலுக்கு சென்றுவிட்டு நேராக இந்த கடைக்கும் செல்வேன் என பதிவிட்டுள்ளார்.
- ஆரணி மற்றும் களம்பூர் சுற்று வட்டார பகுதியில் சுமார் 80 அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன.
- ஆரணி பகுதியில் மட்டும் 5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, களம்பூர் என்றாலே அரிசிக்கு பெயரெடுத்த ஊராக விளங்கி வருகின்றன. ஆரணி மற்றும் களம்பூர் சுற்று வட்டார பகுதியில் சுமார் 80 அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன.
இங்கு பொன்னி, பிடிடி, சோனா டீலக்ஸ், ஐ.ஆர் 50, ஐ.ஆர் 20 உள்ளிட்ட பல ரக அரிசிகள் உற்பத்தி செய்யபடுகின்றன. நாள் ஓன்றுக்கு ஆரணி பகுதியில் மட்டும் 5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதில் 50 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், கோவை உள்ளிட நகரங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் இருந்து மட்டும் 20 சதவீத அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் 5 சதவீதம் ஆரணியில் இருந்து ஏற்றுமதியாகிறது.
சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஆரணி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தற்போது உள்நாட்டு நெல் அரிசி உற்பத்தி குறைவாக உள்ளது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைவானதாலும் அரிசி உற்பத்தி மிகவும் பாதிக்கபட்டுள்ளதால் வெளிநாட்டு அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது.
ஏற்றுமதி தடை செய்யபட்டதால் அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசிகள் ஆலைகளில் தேக்கமடைந்துள்ளன.
இதுகுறித்து ஆரணி அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது:-
ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆரணி, களம்பூரில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய அரிசி மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
கடந்த ஒருவாரத்தில் 5சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தொழில் முழுமையாக பாதிக்கும். அரிசி மூட்டைகள் தேங்கியுள்ளதால் விலை குறைய வாய்ப்புள்ளது. மற்றும் சீராக இருக்கும்.
அரிசி ஆலைகளுக்கு மின் கட்டணம் மானியம் வழங்க வேண்டும் அரசு விதித்த ஜி.எஸ்.டி 5 சதவீதத்தை முற்றிலும் அகற்றி மானியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதுகுறித்து ஆரணி பகுதி விவசாயிகள் கூறுகையில்:-
அரிசி ஆலைகள் தொடர்ந்து உற்பத்தியை குறைத்தால் நெல் மூட்டைகள் தேங்கும். நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தாமதம் ஏற்படும்.
ஏற்றுமதிக்கு தடைநீங்கும் வரை நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதில் பெரும் பிரச்சனை ஏற்படும்.
மேலும் நெல் விலையும் குறையும், விவசாயம் சம்பந்தபட்ட மூல பொருட்களான பொட்டாசியம், யூரியா உள்ளிட்ட பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். நாடு ஒருபோதும் அரிசி நெருக்கடியை சந்திக்காது. விவசாயிகள் நெருக்கடியை சந்திக்க வேண்டும். அரிசி ஏற்றுமதிக்கான தடையை நீக்க வேண்டும் என்றனர்.
- உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
செய்யாறு:
செய்யாறு அடுத்த பண்ணையெச்சூர் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.
பிரகாஷிற்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கடந்த 17-ந் தேதி பிரகாசுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விவசாயத்திற்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக பிரகாஷ் இறந்தார்.
- மணிப்பூர் கலவரம் கண்டித்து நடந்தது
- கோஷங்கள் எழுப்பினர்
ஆரணி:
திருவண்ணமலை மாவட்டம் ஆரணி காந்தி சிலை அருகில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூதன முறையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்கள் எழுப்பியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நகர தலைவர் பொன்னையன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜபாபு, மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் செல்வம் மாவட்ட செயலாளர் உதயகுமார் தொகுதி இளைஞர் காங்கிரஸ் பிரபு, நிர்வாகிகள் மருத்துவர் வாசுதேவன், அசோக்குமார். பாபு, பிள்ளையார், குருமூர்த்தி, சம்பந்தம் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விலை குறைய வாய்ப்பு
- அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி களம்பூர் என்றாலே அரிசிக்கு பெயரெடுத்த ஊராக விளங்கி வருகின்றன. ஆரணி மற்றும் களம்பூர் சுற்று வட்டார பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன.
மேலும் ஆரணி மற்றும் களம்பூர் கஸ்தம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பொன்னி பிடிடி சோனா டீலக்ஸ் ஐ.ஆர் 50, ஐ.ஆர் 20 உள்ளிட்ட பல ரகங்கள் அரிசிகள் உற்பத்தி செய்யபடுகின்றன. நாள் ஓன்றுக்கு ஆரணி பகுதியில் மட்டும் 5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றன.
மேலும் சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், கோவை உள்ளிட நகரங்களிலும் ஆந்திரா, கேரளா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஆரணியிலிருந்து தினந்தோறும் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதனையடுத்து தற்போது உள்நாட்டு நெல் அரிசி உற்பத்தி குறைவாக உள்ளது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைவானதாலும் அரிசி உற்பத்தி மிகவும் பாதிக்க பட்டுள்ளதால் வெளிநாட்டு அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது.
ஆரணியிலிருந்து 5 சதவீதம் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
தற்போது ஏற்றுமதி தடை செய்யபட்டதால் அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசிகள் ஆலைகளில் தேக்கமடைந்துள்ளது.
இதனால் நேரடிடையாக அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் பாதிக்க படுவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் விவசாயம் சம்பந்தபட்ட மூல பொரு ட்களான பொட்டாசியம், யூரியா உள்ளிட்ட பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வு ஏற்பட்டுள்ளது.
தற்போது அரிசி உற்பத்தி அதிகளவில் உள்ளதால் அரிசி விலை குறைய வாய்ப்புள்ளன.
அரிசி ஆலைகளுக்கு மின் கட்டணம் மானியம் வழங்க வேண்டும் அரசு விதித்த ஜி.எஸ்.டி 5 சதவீதத்தை முற்றிலும் அகற்றி மானியம் வழங்க வேண்டும் என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.