search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூரில் 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதை பணி- பொதுமக்கள் போராட்டம்
    X

    திருவொற்றியூரில் 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதை பணி- பொதுமக்கள் போராட்டம்

    • கடந்த 3 ஆண்டுகளாக இந்த சுரங்கப்பாதை பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
    • போராட்டத்தின் போது ரெயில்வே சுரங்கப்பாதை பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் ரெயில்வே கேட் உள்ளது. இந்தபாதை அடிக்கடி மூடப்பட்டதால் அவசர தேவைக்கு அவ்வழியே செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இதையடுத்து அண்ணாமலை நகரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த சுரங்கப்பாதை பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ரெயில்வே சுரங்கப்பாதை பணி கிடப்பில் போடப்பட்டு இருப்பதை கண்டித்து அண்ணாமலை நகர் ரெயில்கே கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ஜெயராமன் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது ரெயில்வே சுரங்கப்பாதை பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    Next Story
    ×