என் மலர்
உள்ளூர் செய்திகள்
பொம்மிடி வார சந்தையில் மலை ஆடுகளை வாங்க குவிந்த வியாபாரிகள்
- தருமபுரி அருகே பொம்மிடி வார சந்தையில் மலை ஆடுகளை வாங்க மக்கள் குவிந்தனர்.
- ரூ. 1 கோடி வரை விற்பனை ஆனது.
தீபாவளியை முன்னிட்டு பொம்மிடி வார சந்தையில் மலை ஆடுகளை வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி பி, குறிஞ்சிப்பட்டி வார சந்தை, வாரம்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. இந்த கால்நடை சந்தை மிகவும் பிரபலமானது, ஏற்காடு மலையில் உள்ள மலை ஆடுகள், கிராமப் பகுதி ஆடுகள், பொம்மிடி, குறிஞ்சிப்பட்டி, முத்தம் பட்டி, ராமமூர்த்தி நகர், பி.பள்ளிப்பட்டி, பையர் நத்தம், மெனசி, கேத்து ரெட்டிப்பட்டி, பில்பருத்தி என 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தங்களது கால்நடை களான ஆடு, மாடு, கோழி போன்ற வைகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் இந்த சந்தைக்கு மக்கள் வருகின்றனர்.
இந்த வாரம் தீபாவளி சந்தை என்பதால் மலைப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள், பொம்மிடி வார சந்தைக்கு அதிக அளவில் வந்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது. தீபாவளி இறைச்சிக்கா–கவும், வளர்ப்புக்காகவும், வியாபாரிகளும், பொது மக்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.
சராசரி குட்டி ஆடுகள் ரூ.4 ஆயிரம் முதல் வளர்ந்து நல்ல நிலையில் உள்ள ஆடுகள் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையாகின. இந்த வார சந்தையில் ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆடுகளை மாவட்–டத்தின் பிறப்பகுதி களும், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திரு வண்ணாமலை என அண்டை மாவட்ட வியாபாரிகள் குவிந்ததால் வார சந்தை மக்கள் கூட்டத்தாலும், கால்நடைகளாலும் நிரம்பி காணப்பட்டது. வியாபாரிகளும், பொது மக்களும் தாங்கள் வாங்கிய ஆடுகளை சரக்கு வாகனங்கள் மூலமாக ஏற்றி சென்றனர்.