என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கனமழையால் மூணாறு சாலையில் பாறைகள் உருண்டு போக்குவரத்து துண்டிப்பு: வாகனங்கள் செல்ல தடை! கனமழையால் மூணாறு சாலையில் பாறைகள் உருண்டு போக்குவரத்து துண்டிப்பு: வாகனங்கள் செல்ல தடை!](https://media.maalaimalar.com/h-upload/2023/07/08/1911707-004.webp)
கேப்ரோடு பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்ததால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் மூணாறு சாலையில் பாறைகள் உருண்டு போக்குவரத்து துண்டிப்பு: வாகனங்கள் செல்ல தடை!
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப்ரோடு பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்து மண்சரிவு ஏற்பட்டது.
- மூணாறிலிருந்து சின்னக்கானல், பூப்பாறை மற்றும் தேனி செல்லும் வாகனங்கள் குஞ்சித்த ண்ணி, ராஜாக்காடு திருப்பி விடப்படுகிறது.
மேலசொக்கநாதபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மூணாறு பகுதி யில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப்ரோடு பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மூணாறிலிருந்து சின்னக்கானல், பூப்பாறை மற்றும் தேனி செல்லும் வாகனங்கள் குஞ்சித்த ண்ணி, ராஜாக்காடு திருப்பி விடப்படுகிறது. கேப்ரோ ட்டில் பாதுகாப்பற்ற சாலை நிர்மாணம் காரணமாகவே அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதனை தொடர்ந்து கேப்ரோடு பகுதியில் உருண்டு விழுந்த பாறைகள் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கனமழை காரணமாக அப்பகுதியை சேர்ந்த அன்னக்கிளி என்பவரின் வீடு இடிந்தது. ராஜாக்காடு ஊராட்சிக்குட்பட்ட மம்பட்டிகானம் பகுதியில் சுரேஷ் என்பவரின் வீடு மீது மரம் முறிந்து விழுந்த தில் சேதம் அடைந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர் மழை காரணமாக போடிமெட்டு-மூணாறு சாலையில் போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.
வாகன ங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.